விடலாம்...
சாரதாவின் மன ஓட்டத்தை நிறுத்துவது போல, “வணக்கம், நான் தான் ரோஹினி,” என்றது ஒரு கணீர் பெண் குரல்.
நிமர்ந்து அவளை பார்த்தாள் சாரதா.
இரண்டு பெட்டிகளை தள்ளுவண்டியில் வைத்துக் கொண்டு சோர்வுடன் நின்றிருந்தாள் அவள்.
முகத்தில் சோர்வு என்றால், கண்களில் கலக்கம் இருந்தது...
அந்த பயத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் இருக்க முயற்சி செய்பவளாக கண்களை மூடி திறந்தவள், மீண்டும், “நான் தான் ரோஹினி,” என்றாள்.
“அதை தான் ஒரு தடவை சொல்லியாச்சே, அப்புறம் என்ன? நான் தான் ரோஹினி, நான் தான் ரோஹினின்னு ரெகார்ட் செஞ்சு வச்ச மாதிரி சொல்லிட்டே இருக்க??? இது தான் நீ தேடி வந்த சாரதா. உனக்கு தெரிஞ்ச கலாவோட அக்கா. என்னோட அம்மா...”
அதிகாரத் தோரணையில் பேசிக் கொண்டே சென்ற அஜயை நேராக பார்த்து ஒரு முறை முறைத்தாள் ரோஹினி!
இவளென்ன இந்த முறை முறைக்கிறாள்! பெரிதாக தப்பாக ஏதாவது சொல்லி விட்டானோ??? கேள்வியுடன் அம்மாவை பார்த்தான் அஜய்.
அவனை கண்களால் சமாதானப் படுத்திய சாரதா, ரோஹினியிடம், “வாம்மா ரோஹினி! கலா உன்னை பத்தி நிறைய சொல்லி இருக்கா... ரொம்ப டையர்டா தெரியுற... வா வீட்டுக்கு போவோம்... நீ ரெஸ்ட் எடுக்கலாம்,“ என்றாள் அன்புடன்!
சாரதாவை வித்தியாசமாக ஒரு பார்வை பார்த்த ரோஹினி, “என்ன நீங்க ரெண்டுப் பேரும்? இப்போ தான் நாம முதல்ல சந்திக்கிறோம்... இருந்தாலும் என் கிட்ட வா, போன்னு எல்லாம் மரியாதை கொடுக்காம பேசுறீங்க???” என்றாள் கண்டிக்கும் குரலில்!