(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

கண்விழித்தான். அவன் பார்க்கிறானே என அவளும் மென்மையாகச் சிரித்தாள். அவள் சிரிப்பதையே ஆச்சர்யமாக பார்த்தான் அவளோ

   

”இப்ப உங்களுக்கு எப்படியிருக்கு” என அக்கறையாக கேட்க அவனோ 

   

”வலிக்குது” என்றான் பாவமாக அதைக்கேட்டு அவளும் கவலையாகி

   

”டாக்டரை இங்க வரவழைக்கவா”

   

”வேணாம்” என சொல்லியவன் மெல்ல எழுந்துக் கொள்ள அவளோ உடனே

   

”ஏன் எழறீங்க படுத்துக்குங்க” என சொல்ல அவனோ கேளாமல் எழுந்து நின்றவன் அவளிடம்

   

”நீ உள்ள கட்டில்ல படுத்து தூங்கு, நான் வெளிய படுத்துக்கறேன்“

   

”இல்லை பரவாயில்லை, நீங்க கட்டில்ல படுங்க உங்க உடம்பு” என அவள் சொல்லி முடிப்பதற்குள் அவன் நிதானமாக நடந்து வெளியேறி ஹாலில் இருந்த சோபாவில் படுத்துவிட்டான். அவளோ சென்று பார்க்க அவன் உறங்கவே ஆரம்பித்தான். அதில் அவளோ ஒரு போர்வையை அவன் மீது போர்த்திவிட்டு வந்து கட்டிலில் அமர்ந்தாள்

   

”இவனைப் பார்க்கறப்ப எங்கப்பா நினைப்பு வருது, இப்ப அவர் எப்படியிருக்காரோ தெரியலை, என்னை தேடுவாரு கண்டிப்பா நான் இங்க வந்த விசயம் தெரிஞ்சி கோச்சிக்குவாரு, வருத்தப்படுவாரு, என்னை பார்க்கனும்னு ஆசைப்படுவாரு. எனக்கும் அவர் நினைப்பாவே இருக்கு, நான் அவரை பார்க்கனும், நான் பிறந்து வளர்ந்து இத்தனை வருஷத்தில ஒரு நாள் கூட நான் என் அப்பாவை பிரிஞ்சதில்லை, என்னையும் எங்கப்பாவையும் இப்படி பிரிச்சி வைச்சிட்டானே இந்த தில்லை, சீக்கிரமாவே நான் அப்பாகிட்ட போகனும் நாளைக்கு என்ன ஆனாலும் சரி இவர்கிட்டயிருந்து நியாயத்தை வாங்காம நான் போக மாட்டேன்” என மனதில் உறுதி எடுத்துக் கொண்டு உறங்கலானாள்.

   

போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சம்யுக்தாவிடம் சிதம்பரமோ

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.