(Reading time: 6 - 12 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

சிறிது நேரத்தில் ஆட்கள் இருவர் வந்தனர், ஒருவன் கையில் சாப்பாட்டுடன் வர இன்னொருவன் தனியாளாக வந்தான்.

   

”இந்தாங்க சாப்பாடு ரெண்டு பேருக்கும் வைச்சிருக்கேன்” என சொல்ல அவளோ தனக்கானதை எடுத்துக் கொண்டு அவர்களிடம்

   

”நீங்களே இருந்து இவருக்கு செய்ய வேண்டியதை செய்ங்க, எனக்கு இதெல்லாம் பழக்கமில்லை” என்றாள் தயக்கத்துடன் அவர்களும் சரியென தலையாட்டிவிட்டு புன்னகைத்தார்கள். அதோடு அவள் வெளியே சென்று சாப்பிடலானாள்.

   

உள்ளே அவர்கள் தில்லையை எழுப்பி உடையை களைத்து குளிக்க வைத்து சாப்பிட வைத்து இதில் அவர்களுக்கு தெரிந்த உடல்வலி மாத்திரையை வேறு தந்து அவனை படுக்க வைத்துவிட்டு சம்யுக்தாவிடம் வந்தார்கள், அதுவரை அவள் அமைதியாக இருந்தாள் 

   

”அவர் தூங்கறாரு தூங்கட்டும் காலையில வந்து பார்க்கறோம்ங்க“

   

”சரிங்க தாங்ஸ்”

   

“இருக்கட்டும்ங்க நமக்குள்ள எதுக்கு இதெல்லாம், அண்ணாவை பத்திரமா பார்த்துக்குங்க” என சொல்லிவிட்டு அவர்கள் சென்றுவிட அவளோ தில்லையைக் காணச் சென்றாள்.

   

அவனுக்கு லுங்கி மட்டும் அணிவித்து காயம் பட்ட இடத்தில் மருந்திட்டு சென்றிருந்தார்கள் வந்தவர்கள், அவளோ அவன் உடல் காயத்தைக் கண்டு வருந்தினாள் அவனருகில் அமர்ந்தாள்

   

”தில்லை தில்லை“ என மெதுவாக அழைக்க அவனோ

   

”அம்மா அம்மா” என அவளை அழைத்தான்

   

”அம்மாவா நானா” என நினைத்தவள் உடனே அவ்விடம் விட்டு செல்ல முயல அவனோ மெல்ல 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.