தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 39 - பிந்து வினோத்
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
துளசி உடனடியாக சொல்ல வந்ததை சொல்லாமல் நந்திதாவை ஆராய்வதுப் போல சில வினாடிகள் உற்றுப் பார்த்தாள்! நந்திதாவிடம் தயக்கமோ, கலக்கமோ இல்லை என்பதை உறுதி செய்து விட்டு பிறகு பேசினாள்.
“நந்து, இங்கே வேலைக்கு சேர்ந்த பிறகு சந்தோஷை ஆஃபீஸ்ல மீட் செய்தீயே அப்போ ஏன் நீ ரிசைன் செய்யலை???”
“அவனை பார்த்தால் என்ன? அதுக்கு ஏன் நான் ரிசைன் செய்யனும்?” என்றாள் நந்திதா உடனடியாக!
“அப்படி வா வழிக்கு! சாரி நந்து... கொஞ்சம் ப்ளன்ட்டா பேச வேண்டி இருக்கு... ஆனால் நான் பேசியே ஆகனும்... ஒன்ஸ் அபான் அ டைம் நீ லவ் செய்த அந்த வில்லன் சந்தோஷை பார்த்தால் உனக்கு ஒரு இம்பாக்ட்டும் இல்லை! ஆனால் நீ விரும்பவே விரும்பாத உதய், லவ் செய்றேன்னு சொன்ன ஒரே காரணத்துக்காக உனக்கு பிடிச்ச வேலையை விட போற??? ஹ்ம்ம்...????”
“அது... அப்படி இல்ல ஒசிமம்... அவருக்கு கீழே வேலை செய்யனும்... டெய்லி பார்க்கனும்...”
“பார்த்தா என்ன? உதய்க்கு உன்னை பிடிச்சிருக்குன்னு சொன்னான்... உனக்கு அந்த மாதிரி இன்ட்ரஸ்ட் இல்லைன்னு சொல்லிட்ட... அவ்வளவு தானே??? ஏன் அந்த வில்லனை கூட தான் வேலை விஷயமா நீ அப்பப்போ பார்க்க வேண்டி வரும்...”
“அது...”
நந்திதா தடுமாற, துளசி அவளை பார்த்து முறைத்தாள்.
“என் கிட்டேயே பொய் சொல்ற பார்த்தீயா????”
சமாளிக்க வாயை திறந்த நந்திதா, துளசியின் முகத்தை பார்த்து மனதை மாற்றிக் கொண்டவளாக, “இல்லடி...” என இழுத்தாள்!