(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

“உதைப்பேன்...”

   

“போடி...! ஆனால் எனக்கு ஒன்னு புரியலை... அதான் உதய்க்கும் உன் மேல ஒரு இதுன்னு தெரியுதுல, பேசாம நல்ல பொண்ணா அவன் கிட்ட ஓகேன்னு சொல்லி செட்டில் ஆகிடலாம்ல...”

   

“ஹுஹும்....”

   

“என்ன ஹுஹும்???”

   

நந்திதா மொபைலை எடுத்து தேடி ஒரு பாடலை பாட விட்டாள்...

   

நதியில் தெரியும் நிலவின் உருவம் நதிக்கு சொந்தமில்லை...
நினைப்பதெல்லாம் நடக்கும் வாழ்க்கை யாருக்கும் அமைவதில்லை...

   

“நீங்க நதி, அப்போ உதய் தான் நிலாவா, ரொம்ப கொடுமையா இருக்கே...!”

   

நந்திதா முறைக்கவும்,

   

“சரி சரி... ஜோக் அடிக்கலை நந்து... நீ என்ன சொல்ல வரேன்னு புரியுது... ஆனால் ஏன்??? உங்க ரெண்டு பேர் நடுவே இருக்க வயசு வித்தியாசம் பத்தி யோசிக்குறீயா???” என சீரியஸாக கேட்டாள் துளசி!

   

நந்திதா பதில் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்!

   

அவளை ஒரு பார்வை பார்த்து விட்டு துளசியே பேசினாள்.

   

“நந்து, உதய் சரத்தை விட மூணு வருஷம் சின்னவன்... ஆனால் எத்தனையோ விஷயங்கள்ல அவரே அட்வைஸ், ஐடியாஸ் கேட்குற அளவுக்கு இருக்கான்... அவனே சொன்னது போல சின்னவனா இருந்தாலும் நல்லா மெச்சுர்டா யோசிக்க கூடியவன்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.