(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

   

“பேசாதே நந்து...”

   

“துளசி...”

   

“உனக்கு உதயை பிடிக்கும்ன்னு என் கிட்ட உண்மையை சொன்னா என்ன உனக்கு குறைஞ்சு போக போகுது??? நான் தான் அவன் உனக்கு பெர்ஃபெக்ட் மேட்ச்ன்னு கொஞ்ச நாளாவே சொல்லிட்டு இருக்கேனே...”

   

“ஒசிமம்...” மேலே என்ன சொல்வது என்று புரியாது விழித்தாள் நந்திதா!

   

“ம்ம்ம்... சரி சரி... போதும் போதும் குட்டி பாப்பா மாதிரி முழிச்சது... இப்போவாவது உண்மையை சொல்லு... எப்போ இருந்து இந்த லவ்ஸ்???? நீ விழுந்து விழுந்து வேலை செய்யும் போதே எனக்கு தெரியும் இப்படி தான் வந்து நிக்கும்னு...”

   

“ஹேய் அதெல்லாம் அப்படி இல்லை... நேத்து...” என்ற நந்திதா, மேலே எப்படி சொல்வது என்று யோசிக்க,

  

துளசி அவள் கொடுத்த சின்ன ஹின்டிலேயே முழு விஷயத்தையும் புரிந்துக் கொண்டவளாக,

   

“ஓ...! ரேவதி அத்தையோட அட்டாக்ல தான் உனக்கு உன்னோட லவ்ஸ் புரிஞ்சுதாக்கும்... அதானா இந்த ரெசிக்னேஷன் ட்ராமா எல்லாம்....?”

   

“ட்ராமா எல்லாம் இல்லை துளசி... நான் நிஜமாவே வேலையை விட தான் போறேன்... இப்போ உனக்கு தெரிஞ்ச இந்த விஷயம் உன்னோடவே இருக்கட்டும்...”

   

“என்னது நான் ரகசியம் மெயின்டெயின் செய்யனுமா? அதெல்லாம் என்னால ஆகாது....! என் தலையே வெடிச்சிடும்... அத்தை கிட்ட மட்டும்... இல்லை இல்லை, அத்தை கிட்டேயும் சரத் கிட்டேயும் மட்டும் சொல்றேன்....”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.