“அப்படி செய்துட்டா, உடனே அவன் வாழ்க்கையில தேனாறும் பாலாறும் ஓடுமா???? உனக்கென்ன அறிவில்லையா????”
துளசியின் கோபத்தில் இருந்து நந்திதாவை காப்பாற்றுவது போல,
“துளசி...” என்று சத்தமாக அழைத்த சரத்தின் குரல் கேட்டது.
தோழியிடம் திரும்பி வருகிறேன் என்று சைகை செய்துவிட்டு அவசரமாக எழுந்து சென்றாள் துளசி.
✽✽✽
நந்திதாவின் ரூமில் இருந்து நேராக தங்களின் அறைக்கு சென்ற துளசி, அங்கிருந்த சரத்திடம், “என்னங்க?” என்றாள் கேள்வியுடன்.
“சாரி துளசி... உதய் லைன்ல இருக்கான்... உன் கிட்ட பேசியே தீருவேன்னு அடம் பிடிக்குறான்,” என்றான் சரத்.
“நானும் அவன் கிட்ட பேசனும், கொடுங்க...”
ஃபோனை சரத்தின் கையில் இருந்து பிடுங்காத குறையாக வாங்கிய துளசி,
“என்ன சார், ஆஃபிஸ்ல வேலை தவிர எல்லாம் செய்றீங்க போலிருக்கு,” என்றாள் கேலியாக!
“நான் சார் இல்லை அண்ணி... உ...சார்.... உங்க ஃப்ரென்ட் எனக்கு வச்ச நிக் நேம்...”
“அதெல்லாம் எனக்கும் தெரியும்...”
“என்னது தெரியுமா??? என்னோட ஆளு இன்னுமா மாறலை?”