“இல்லை துளசி, அவர் அம்மாக்கு என்னை பிடிக்காது...”
“அது சரி... மாமியாருக்கு பிடிச்சா தான் கல்யாணம் செய்துப்பேன்னா நீ அம்மா இல்லாத பையனா தான் தேடனும்... நான் சரத்தை லவ் செய்தப்போ எதையுமே யோசிக்கலை... லக்கிலி எல்லாம் நல்ல படியா அமைஞ்சது... அத்தையும் நானும் இப்போ இவ்வளவு செல்லம் கொஞ்சுறோம்னா அதெல்லாம் இப்போ வந்த அண்டர்ஸ்டேண்டிங்...”
“அதை தான் நானும் சொல்றேன்டி... நீ லவ் செய்தது காலேஜ்ல படிக்கும் போது... அப்போ வாழ்க்கை என்னவோ கலர் கலரா பூத்து குலுங்குற தோட்டம் போல தான் தோணும்... ஒண்ணுமே தெரியாம அப்படி லவ் செய்த சிலருக்கு தான் உன் போல லக் அடிக்கும்ப்பா... காலேஜ் டேஸ்ல நீயும் கூட எனக்கும் சந்தோஷ்க்கும் நடுவே இருந்த அந்த பப்பி லவ்வை என்கரேஜ் செய்திருக்க... இப்போ அதையே செய்வீயா????”
துளசி யோசனையுடன் இல்லை என்ற அர்த்தத்தில் தலை அசைத்தாள்....
“ரைட்...! பிகாஸ் வீ னோ டு ஜட்ஜ் பீப்புள் பெட்டர்.... இப்போ யோசிச்சு பார்த்தா, எதை வச்சு அவனை நான் லவ் செய்தேன்னு எனக்கே புரிய மாட்டேங்குது... அவன் பட்டாம்பூச்சியா வேற பூ தேடி போனது தான் என்னோட லக்....!”
“பழசை எல்லாம் எதுக்கு இப்போ பேசனும் நந்து... விட்டு தள்ளு...”
“யெஸ்.... அந்த டாபிக் வேணாம்....! இப்போ நமக்கு வாழ்க்கைனா என்னன்னு தெரியும்... கல்யாணம்னா எவ்வளவு பெரிய விஷயம்னு தெரியும்... என்னை பத்தி மட்டும் யோசிச்சு முடிவு எடுக்க மனசு வர மாட்டேங்குது துளசி...”
“ப்ச்.... சீரியல் ஹீரோயின் போல பேசாதே நந்து... ரேவதி அத்தைக்கு உதய் ஒரே மகன்... மாமாவும் இல்லை...”
“இல்லை துளசி வேண்டாம்... இந்த பேச்சை விட்டுடு... அவருக்கு நான் சரியா வர மாட்டேன்... அவரோட அம்மா பார்க்குற பொண்ணையே அவர் கல்யாணம் செய்துக்கட்டும்...”