(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

Chillzee Originals : தொடர்கதை - வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே... - 10 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

காஷ் ஆச்சர்யத்துடன் சினேகாவைப் பார்த்தான்.

   

“யூ மீன், அஸ்வத் சாரோட ப்ராஜக்ட்டா?”

   

“யெஸ் சார். ஜே.யூ க்ரூப்ஸ் செலக்ட் செய்திருக்கும் ப்ளான் என்னுடையது தான்!”

   

ஆகாஷ் உதட்டில் தோன்றிய புன்னகையை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே, “பழைய காலத்துல, ராஜா ராணிங்க எல்லாம் அவங்க அருமை பெருமையை சொல்ல தனியா ஒரு ஆள் வச்சிருப்பாங்களாம்! நீங்களும் கூட அப்படி ஒருத்தரை அழைச்சிட்டு வந்திருக்கலாம்,” என்றான் ஆகாஷ்!

   

அவள் செல்ஃப் டப்பா அடிக்கிறாள் என அவன் மறைமுகமாக சொன்னதில் சினேகாவிற்கு எரிச்சல் வந்தது.

   

“சார், நான் உங்களை மாதிரி அப்பாவோட நிழல்ல இருந்து வந்தவ இல்லை. ஒவ்வொரு அடியையும் சொந்தமா எடுத்து வச்சவ. என் திறமை மேல எனக்கு நம்பிக்கை இருக்கு. எ...”

   

சினேகாவின் பேச்சை நிறுத்துவது போல கதவை தட்டும் ஓசை கேட்டது. தொடர்ந்து, கதவை திறந்துக் கொண்டு ஆகாஷின் உதவியாளர் ஐஸ்வர்யா உள்ளே வந்தாள்.

   

“சாரி டு டிஸ்டர்ப் யூ பாஸ். டூ வீக்ஸ்ல இருக்க போர்ட் மீட்டிங்குக்காக டிபார்ட்மென்ட் ஹெட்ஸ் மீட்டிங் அரேஞ் செய்ய சொல்லி இருந்தீங்க... அது இப்போ ஸ்டார்ட் ஆக போகுது... மிஸ் சினேகா ரொம்ப நேரமா வெயிட் செய்துட்டு இருந்ததால நடுல கிடைச்ச ஃபைவ் மினிட்ஸ் ப்ரேக்ல அவங்களை அனுப்பினேன்...”

   

ஐஸ்வர்யா தன்னிலை விளக்கம் கொடுப்பது போல ஆகாஷின் அடுத்த மீட்டிங் பற்றி நினைவுப் படுத்தவும், சினேகாவிற்கு தன்னுடைய அதிகபடியான பேச்சு உடனே புரிந்தது.

   

அவளுடன் பேச ஐந்து நிமிடங்கள் மட்டுமே போதும் என்று ஆகாஷின் செக்ரட்டரி கூட நினைத்திருக்கிறாள்! ஆனால் கம்பெனியின் எம்.டியான ஆகாஷ் அவளுக்கு மதிப்புக் கொடுத்து 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.