(Reading time: 7 - 13 minutes)
Vaanum mannum katti kondathe
Vaanum mannum katti kondathe

   

“நீங்க எங்களுக்கு பெரிய வி.ஐ.பி கஸ்டமர் ஆகாஷ் சார். நீங்க என்ன மாதிரி அந்த பார்க்கிங் கட்ட பிரியப் படுறீங்கன்னு உங்க கிட்ட கேட்டு டிசைன் செய்றது நானா இருந்தாலும், அதை என்னோட சீனியர் ஆர்கிடேக்ட்ஸ் இரண்டு பேர் ரெவ்யூ செய்வாங்க. எங்க எம்.டி கைலாசமூர்தியும் செக் செய்வார். நீங்க விஷுவலைஸ் செய்திருக்குறதை அப்படியே உங்களுக்கு பிடிச்ச மாதிரி நல்ல படியா செய்து முடிக்குற பொறுப்பு எங்க எல்லோருக்கும் இருக்கு.”

   

டி.வி விளம்பரங்களை தோற்கடிக்க கூடிய விதத்தில் சினேகா பேச, ஆகாஷ் அமைதியாக அமர்ந்திருந்தான்.

   

ஒரு சில வினாடிகள் பொறுத்து பார்த்த சினேகா, அவன் தொடர்ந்து அமைதியாக இருக்கவும்,

   

“சார், உங்களுக்கு எவ்வளவு வயசு இருக்கும். என்னை விட மிஞ்சி மிஞ்சி போனால் ஒரு அஞ்சு வயசு அதிகமா இருக்கும். ஒரு யங்ஸ்டரான நீங்க என்னை மாதிரி ஒருத்திக்கு எக்ஸ்பீரியன்ஸ் வச்சு மட்டும் சான்ஸ் கொடுக்கலைனா எப்படி சார்??? அதும் இது என் டேலன்ட் வச்சு நான் சம்பாதிச்ச வாய்ப்பு!”

   

இப்போதும் ஆகாஷ் பதில் சொல்லவில்லை.

   

டேபிள் மீதிருந்த பேப்பர் வெயிட்டை கையால் உருட்டி விளையாடியபடி அமர்ந்திருந்தான்.

   

ஹுஹும்... இந்த அசைன்மென்ட் கை நழவி போய் விட்டது என்று சினேகா மனசுக்குள் முடிவே செய்து விட்ட போது, திடீரென,

   

“ஓகே, மிஸ் சினேகா. நீங்க சொல்றதும் சரி. அஸ்வத் உங்க ப்ளான் வச்சு தான் உங்க கம்பெனியை சிபாரிசு செய்தார். அதை டெவலப் செய்த உங்க திறமையை பத்தி எதுவுமே தெரிஞ்சுக்காம ஒரு முடிவுக்கு வர எனக்கு விருப்பமில்லை. அது என் குருவா நான் நினைக்குற அஸ்வத்க்கு நான் காட்டுற மரியாதை இல்லை. எங்க ஐடியா என்னன்னு சொல்றோம், நீங்க ப்ளான் போட்டு காட்டுங்க. அதுக்கு அப்புறம் பேசுவோம்,” என்றான் ஆகாஷ்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.