அமைதியாக அவளிடம் பேசிக் கொண்டிருக்கிறான். அப்படி இருக்க, அவனிடம் என்ன மாதிரி பேசி விட்டாள்!!!???
அவளுக்கு அவளுடைய திறமை மேல் இருக்கும் நம்பிக்கை பற்றி சொன்னது சரி. ஆனால் அதற்காக ஆகாஷ் அவனுடைய அப்பாவின் நிழலில் இருந்து வந்தவன் என்று எல்லாம் பேச வேண்டிய அவசியம் என்ன வந்தது?
தனக்குத் தானே யோசித்த படி ஆகாஷ் அவனின் செக்ரட்டரிக்கு பதில் சொல்வதை கவனித்தாள் சினேகா.
“இட்ஸ் ஓகே ஐஸ்வர்யா. நான் இவங்களோட இன்னும் கொஞ்சம் டிஸ்கஸ் செய்ய வேண்டி இருக்கு. அந்த மீட்டிங்குல பேசுற விஷயங்களை நோட்ஸ் எடுத்து வச்சுக்கோங்க. நான் ஜாயின் செய்த உடனே கேட்ச்-அப் செய்ய எனக்கு ஈசியா இருக்கும்!”
“ஷுயர் பாஸ்!”
ஐஸ்வர்யா வந்த வழியே சென்ற உடன், ஆகாஷின் பார்வை மீண்டும் சினேகாவின் மீது படிந்தது.
அதற்காகவே காத்திருந்தது போல,
“சாரி... சாரி... மிஸ்டர் ஆகாஷ். நான் பேசினது தப்பு.. ஐ ஆம் எக்ஸ்ட்ரீம்லி சாரி...” என்று சாரி மழை பொழிந்தாள் சினேகா.
ஆகாஷ் அவளின் மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாகவும் சொல்லவில்லை, மறுத்தும் பேசவில்லை. அலட்டிக் கொள்ளாமல் மெல்ல தலையை அசைத்து விட்டு, தான் பேசிக் கொண்டிருந்த விஷயத்தை தொடர்ந்தான்.
“உங்க திறமை மேல உங்களுக்கு இருக்க தன்னம்பிக்கை எனக்கு புரியுது. ஆனால் விளையாடி பார்க்க எங்க ப்ராஜக்ட் ஒன்னும் ப்ளே கிரவுண்ட் இல்லையே. நீங்க ப்ராஜக்ட் ஸ்டார்ட் செய்துட்டு ஏதாவது தப்பா போனா நஷ்டம் எனக்கும், என் கம்பெனிக்கும் தானே?”