அதன் பிறகு கோபம்...
அடுத்த சில வினாடிகளிலேயே இறங்கி வந்து மன்னிப்பு, பின் அடக்கம்!
வாவ்! வாவ்!
அவன் இது போல வண்ண வண்ணமாக உணர்வுகளை காட்டும் பெண் யாரையும் சந்தித்ததே இல்லை...
சத்தமாக ஒலித்த அவனின் செல்ஃபோனின் ரிங்டோன் அவனை அவனின் யோசனையில் இருந்து வெளியே கொண்டு வந்தது.
ஃபோனை அட்டென்ட் செய்து காதில் வைத்தான், “ஹலோ ஆகாஷ்,” என்ற சுபாஷினியின் குரல் கேட்டது.
“அம்மா!!!”
“ஆகாஷ், டைம் என்ன ஆகுது, ஏன் ஃபோன் செய்யலை???”
ஆகாஷின் கண்கள் சுவரில் இருந்த பெரிய கடிகாரத்திடம் சென்றது.
மணி பதினொன்றை தாண்டி பத்து நிமிடங்கள் ஆகி இருப்பது புரியவும் அவனின் அம்மாவின் கேள்விக்கான அர்த்தம் அவனுக்கு புரிந்தது.
தினமும் காலை பதினோரு மணிக்கு ஷார்ப்பாக அம்மாவிடம் பேசுவான் ஆகாஷ். முக்கியமான வேலைகளோ, மீட்டிங்குகளோ இருந்தால் மட்டும் தாமதமாக பேசுவான். ஆனால் அந்த மாதிரி நாட்களில் நேரத்திற்கு பேச முடியாது என்று அம்மாவிடம் முன்பே சொல்லி வைத்திருப்பான்.
“சாரி மம்ஸ் நான் டைமை கவனிக்கவே இல்லை.” என்று உண்மையையே சொன்னான்