அவனின் பேச்சில் இப்போது கூடி இருந்த அதிகாரத் தன்மையை மனதினுள் நோட் செய்தபடி,
“தேங்க்ஸ் சார்,” என்றாள் சினேகா.
“என் செக்ரட்டரி கிட்ட ஷ்யாமளா சீட் எங்கேன்னு கேட்டீங்கனா டைரக்ட் செய்வாங்க. ஷ்யாமளா கிட்ட நீங்க கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ்ல இருந்து வந்திருக்கேன்னு சொன்னா அவங்க உங்களுக்கு வேண்டிய உதவி செய்வாங்க!”
“ஓகே சார். தேங்க்ஸ்” என்று அவனிடம் மரியாதையுடன் சொல்லி விட்டு எழுந்து நடந்தாள் சினேகா.
ஆஃபிஸின் வெளியே அவளை பார்த்த போது கொலுசுகள் அணிந்திருந்தாளே... ஏன் இப்போது கொலுசொலி கேட்கவில்லை?? என்ற கேள்வி ஆகாஷின் மனதினுள் எழுந்தது...
அதை பற்றி தெரிந்திராத சினேகா, மூடி இருந்த கதவை திறந்துக் கொண்டு வெளியே சென்றாள்...
அவள் சென்ற உடனே மூச்சை நன்றாக இழுத்து விட்டான் ஆகாஷ்!
ஹப்பப்பா... என்ன மாதிரியான புயல் இவள்!
முதல் முறை டாக்சியின் அருகே அவள் குரல் அவனின் காதில் விழுந்த போது அதில் என்ன ஒரு மரியாதை, என்ன ஒரு பொறுமை!
திறமை பற்றிய அவனின் பேச்சிற்கு பதில் சொன்ன போது அதில் மின்னிய தன்னம்பிக்கையும், தைரியமும்...
அப்புறம் பிடிவாதம்...