(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 23 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ரேஷ்மி ரோஷனியின் முகத்தை ஆராய்ந்தாள்!

   

அங்கே கோபம் இல்லாமல் வருத்தம் மட்டுமே இருந்தது...

   

இப்போது என்று மட்டும் இல்லாமல், ரேஷ்மிக்கு நினைவு தெரிந்த நாள் முதலே, சித்தி அவளை பெயருக்கு கூட திட்டியதில்லை... கோபப்பட்டதில்லை...

   

சின்ன விஷயம், பெரிய விஷயம் என்று ஒவ்வொன்றையும் தன் சொந்த மகளுக்கு செய்வது போலவே அவளுக்கு பார்த்து, பார்த்து செய்வாள்...

   

இதெல்லாம் புரிந்தாலும் ரேஷ்மியால் அவளை அம்மா என்று அழைக்க முடிந்ததில்லை...

   

அம்மா என்றாலே ரேஷ்மிக்கு நிழலாய் புன்னகையுடன் பேசும், அணைக்கும் அம்மாவின் நினைவு மட்டுமே வரும்....

   

சித்தி, பாட்டி, சித்தப்பா, தம்பி என எத்தனை உறவுகள் இருந்தாலும், அந்த நிழல் உருவ உறவான அம்மா அவளுக்கு எப்போதுமே தனி தான்...

   

ஆனால், அப்பா....!!!!????

   

நினைக்கும் போதே ரேஷ்மிக்கு கசந்தது...

   

அவளுடைய அப்பாவுடன் அவளுக்கு பிரியமானதாக ஒரே ஒரு சிறிய நினைவு கூட இல்லை...

   

ரேஷ்மியின் முகத்தை பார்த்து அவளின் சித்திக்கு என்ன புரிந்ததோ,

   

“ரேஷு... எத்தனை தடவை சொல்லி இருக்கேன்... உங்க அப்பா இல்லாம நீ டாக்டருக்கு படிச்சிருக்க முடியுமா??? நீன்னு இல்லை, அபிலாஷ் இப்போ நல்ல காலேஜ் போறதுக்கு கூட உங்க அப்பா தான் காரணம்,” என்றாள் தேற்றும் விதமாக.

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.