(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

படத்தை பார்த்ததும் நடப்பதை நிறுத்தி விட்டு அசையாமல் நின்றாள்...

   

கடந்து போன ஆண்டுகளில் ஒவ்வொரு முறை அந்த படத்தை பார்க்கும் போதும் அவளின் மனதில் ஏற்படும் அதே நெகிழ்வு இப்போதும் தோன்றியது...

   

கைகளை மார்புக்கு குறுக்கே மடித்து கட்டிக் கொண்டவளுக்கு, எப்போதோ சின்னஞ் சிறு வயதில் அம்மா அவளை அணைத்த நினைவு அலை மோதியது... இப்போதும் அம்மா அவளை அணைப்பது போல ஒரு உணர்வு அவளுள் தோன்றியது...

   

“ஐ மிஸ் யூம்மா.... நான் டாக்டர் ஆகிட்டேன்னு தெரிஞ்சா எப்படி சந்தோஷப் பட்டிருப்பீங்க... நீங்க மட்டும் என் கூட இருந்திருந்தா....”

   

“.... ரேஷ்மி எதுவோ சொல்லனும்னு சொன்னா... இதோ இங்கே தான் இருக்கா... ரேஷ்மி... ரேஷ்மி... அப்பா கிளம்புறார் பார்,” சித்தியின் படபடப்பான குரலில் தன் சிந்தனை கலைந்து வெளியே வந்த ரேஷ்மி, ஒரு பெருமூச்சுடன் உணவறைக்கு சென்றாள். அங்கே அலுவலகம் கிளம்ப தயாராக இருந்த தன் அப்பா எனும் அந்த உருவத்தை நோக்கினாள்...

   

கமலும் தன் ஜீவனில்லாத கண்களால் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

   

ஓடி போயிருந்த வருடங்கள் அவனையும் மாற்றி இருந்தது...

   

ஐம்பத்தி ஐந்து வயதிற்கு மிகவுமே வயதானவனாக தெரிந்தான்... கிட்டத்தட்ட கேசம் முழுவதுமே வெளுத்து போயிருந்தது.. அதை ரொம்பவும் சாதாரணமாக பெயருக்கு சீவி விட்டிருந்தான்...

   

முகத்தில் மலர்ச்சியோ... உதட்டில் புன்னகையோ... ஹுஹும்... பெயருக்கும் எதுவும் இல்லை...

   

“ரேஷ்மி சொல்லு...” சித்தி மீண்டும் குரல் கொடுக்க,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.