(Reading time: 7 - 13 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

முகத்தை அஷ்டக் கோணலாக்கிய ரேஷ்மி, “வேணும்னா அந்த காசை எல்லாம் வட்டியோட சேர்த்து அவருக்கு திரும்ப கொடுத்துடுறேன் சித்தி... ப்ளீஸ்... இன்னைக்கு ஒரு நாளாவது ப்ளேட் போட்டு என் மூடை ஸ்பாயில் செய்யாதீங்க... கோல்ட் மெடல் வின்னர் அழுமூஞ்சியா போய் நின்னா நல்லா இருக்குமா???” என சீரியஸாக ஆரம்பித்து, சிரிப்புடன் முடித்தாள்!

   

இப்போதும் மறுப்பாக தலை ஆட்டிய ரோஷனி, “இங்கே பாரு ரேஷு... உன் அப்பா கிட்ட பேசி அவரையும் வர சொல்ற... இல்லைன்னா நான் ஈவ்னிங் வர மாட்டேன்... உன் தம்பியும் வர மாட்டான்,” என்றாள் கறாராக!

   

“ஹ்ம்ம்... ஏன் அத்தோட நிறுத்திட்டீங்க சித்தி... சொல்லுங்க... உன் சித்தப்பாவும் வர மாட்டார்... உன் பாட்டியும் வர மாட்டாங்க....”

   

ரோஷனி கையிலிருந்த தட்டில் என்னவோ செய்துக் கொண்டு பதில் சொல்லாமல் அமைதியாக நின்றாள்!

   

ரேஷ்மியின் முகத்தில் சிரிப்பு தோன்றியது!

   

“எனக்கு உங்க எல்லோரை பத்தியும் நல்லா தெரியும் சித்தி... உங்க ஒருத்தராலேயும் என் ஃபங்க்ஷனுக்கு வராம இருக்க முடியாது... ஃபங்ஷன் ஆரம்பிக்க ஒரு மணி நேரத்துக்கு முன்னாடியே வந்திருவீங்க... நல்லாவே தெரியும்... ஆனாலும் என் பியூட்டிஃபுல் சித்தி வருத்தப் படக் கூடாது... அந்த ஒரே காரணத்துக்காக நீங்க சொல்ற மாதிரி அவர் கிட்ட பேசுறேன்...”

   

ரோஷனியின் முகம் மலர்ந்தது!

   

“என் செல்லம்டா நீ... நல்ல பாப்பா...!!! சீக்கிரமா வா... அப்பா சாப்பிட்டு கிளம்பிட போறார்....”

   

“வரேன் வரேன்....” வேண்டா வெறுப்புடன் சொன்னாள் ரேஷ்மி.

   

ஆனாலும் சொன்ன சொல் தவறாதவளாக அடுத்த பத்தாவது நிமிடம் உணவறையை நோக்கி நடந்தாள். உணவறைக்கு பக்கத்தில் இருந்த ஹாலில் மாட்டி இருந்த சுமித்ராவின் பெரிய 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.