(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 16 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஸ்ட்ராங்கான காஃபியினால் தலைவலி குறைந்திருந்தாலும், கண்களை இறுக மூடிக் கொண்டு, கைகளால் தலையை மீண்டும் பற்றிக் கொண்டான் மித்ரன்!

   

மீண்டும் அவனின் மனம் சரண்யாவிடமே போய் நின்றது!

   

ஏன், என்ன என்ற காரண காரியம் ஒன்றுமில்லாமலே, எதனாலோ சரண்யாவை பார்த்ததாக அவனுக்கு ஒரு எண்ணம் தோன்றிக் கொண்டே இருந்தது...

   

ஏன் என்று தன்னை தானே கேட்டுக் கொண்டான்... அவனிடம் பதில் இல்லை...

   

முன் தின இரவு போலீஸ் கான்ஸ்டபிலிடம் விவாதம் செய்தது மங்கலாக அவனுக்கு நினைவில் இருந்தது... ஒருவேளை சரண்யா அங்கே இருந்தாளோ? ஆனால் ஏன்????

   

உடனடியாக எழுந்து டிரைவரை தேடி சென்றான்...

   

மித்ரனை பார்த்ததும் காரை துடைத்துக் கொண்டிருந்த டிரைவர் அதை விட்டு விட்டு அவனிடம் ஓடி வந்தான்.

   

“நேத்து நைட் ரோட்ல என்ன நடந்துச்சு??? நான் என்ன சொன்னேன், அந்த கான்ஸ்டபில் என்ன செஞ்சாரு?” கேள்விகளாய் அடுக்கினான் மித்ரன்!

   

மெல்லிய தர்ம சங்கடத்துடன் நெளிந்த டிரைவர், “கான்ஸ்டபில் கிட்ட லஞ்சம் தரேன், அதை எடுத்துட்டு போன்னு எல்லாம் சொன்னீங்க சார்... அவருக்கு கோபம் வந்திருச்சு... அரெஸ்ட் செஞ்சு, எஃப்ஐஆர் ஃபைல் செஞ்சே தீருவேன்னு அடம் பிடிச்சுட்டு இருந்தார்.. அப்புறம் நல்ல வேளையா அந்தம்மா வரவும், அவங்க சொன்னதுக்காக தான் போக விட்டார்,” என்றான்.

   

மித்ரனின் சந்தேகம் அதிகமானது!

    

“அம்மாவா? எந்த அம்மா?” என்றான் வேகமாக!

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.