(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

வந்து நின்றார் கந்தசாமி.

   

“என்ன இது? ஏன் லாக்காகி இருக்கு?”

   

மித்ரன் சுட்டிக் காட்டிய பக்கம் இருந்த அலமாரியை பார்த்து விட்டு, “இது...” என்று தயக்கத்துடன் இழுத்தான் கந்தசாமி...

   

“என்ன?”

   

“இது கோபி சார் யூஸ் செய்துட்டு இருந்தது சார்... சரண்யா மேடம் இருந்தப்போ அதை தொடாம அப்படியே விட்டு வச்சிருந்தாங்க... கோபி சாருடைய பொருள் எதையுமே அவங்க மாத்தலை... நீங்க வந்தப்புறம் எல்லாத்தையும் மாத்தி வச்சோம்... ஆனால் இதை கவனிக்காம விட்டுட்டோம் போலருக்கு...”

   

சரண்யாவை வருத்தப் படுத்த வேண்டுமென்றே அந்த அறையில் இருந்த பொருட்களை மாற்ற சொன்னது இப்போதும் மித்ரனுக்கு நினைவு இருந்தது!

   

மனதுக்குள் குற்ற உணர்ச்சி தோன்ற, அதை மறைக்க முயற்சி செய்துக் கொண்டே, “ம்ம்ம்... சரி... இதோட சாவி எங்கே???” என வினவினான்!

   

“அந்த மாஸ்டர் கீ பன்ச் இருந்ததே, அதுல இருக்கும் சார்... வேற யார் கிட்டேயும் சாவி இருக்காது... அந்த சாவி கொத்தை எடுத்து கொடுங்க, நான் எந்த சாவின்னு கண்டுப்பிடிச்சு சொல்றேன்...”

   

“இல்லை இப்போ வேண்டாம்... நான் பார்த்துக்குறேன்... நீ போ...”

   

கந்தசாமி அங்கிருந்து சென்ற பின் தன் மேஜையினுள் இருந்த சாவி கொத்தை எடுத்த மித்ரன், அந்த மர அலமாரியின் சாவி துவாரத்தின் அளவை கணக்கில் கொண்டு ஒரு சில சாவிகளை முயன்று, நான்காவது முயற்சியில் சரியான சாவியை கண்டுப்பிடித்தான்.

   

அலமாரியின் கதவை திறந்த போது, என்ன எதிர்பார்க்கின்றான் என்பது மித்ரனுக்கே 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.