(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

“முன்னாடி உங்க கம்பெனில வேலைக்கு வந்துட்டு இருந்தாங்களே... சரண்யான்னு... அவங்க சார்...”

   

சரண்யாவை பார்த்ததாக அவனுக்கு தோன்றியது கற்பனை இல்லை... ஆனால், சரண்யா அவனுக்கு உதவினாள் என்பதை மித்ரனால் நம்பவே முடியவில்லை...! அவனை அரெஸ்ட் செய்தால் அவள் சந்தோஷப் பட்டிருக்க வேண்டுமே!!!!

   

சந்தேகத்துடன், “சரண்யா சொன்னதும் அந்த கான்ஸ்டபில் அப்படியே கேட்டாரா?” என்றான் மித்ரன்!

   

“அவர் அவங்களுக்கு தெரிஞ்சவர் போலருக்கு சார்... சின்னம்மா அவங்களுக்கு நிறைய ஹெல்ப் செய்திருக்காங்கன்னு சொல்லி உங்களை இந்த ஒரு தடவை மன்னிச்சு விட்டுட சொல்லி கேட்டாங்க... கான்ஸ்டபிளும் அவங்களுக்காகன்னு இந்த ஒரு தடவை எச்சரிக்கை மட்டும் செஞ்சு அனுப்பி வச்சார்...”

   

அதற்கு மேல் எதுவும் கேட்க தோன்றாமல் டிரைவர் போக சொல்லி விட்டு மீண்டும் வீட்டினுள் வந்தான் மித்ரன்.

   

குஷன் நாற்காலியில் அமர்ந்த போது அவனுக்குள் இதுவரை பரிச்சயமே இல்லாத, இனம் புரியாத ஒரு வித புது உணர்வு தோன்றி இருந்தது...

   

மைத்ரேயிக்காக என்றாலும் கூட சரண்யா அவனுக்காக பேசினாள் என்பதை அவனால் இப்போதும் நம்பவே முடியவில்லை...

   

அவளை அவன் எத்தனை முறை அவமானப் படுத்தி இருக்கிறான்... என்ன எல்லாம் பேசி இருக்கிறான்...

   

அதுவும் ஒவ்வொரு முறையும் வேண்டுமேன்றே அல்லவா செய்தான்...!

   

இலக்கில்லாமல் பார்த்துக் கொண்டு யோசனையில் ஆழ்ந்துப் போனான் மித்ரன்!

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.