Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 35 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லையும் குளித்து முடித்து வெளியே வருகையில் மணப்பெண் அலங்காரத்துடன் இருந்த சம்யுக்தாவைக் கண்டு ஆஆஆவென வாய் பிளந்தான். அவளோ
”போலாமா”
”எங்க“
”டாக்டர்கிட்ட”
“அதுக்கு ஏன் இப்படி ரெடியாகி நிக்கற”
”இன்னியோட உங்களை விட்டு நான் போயிடலாம்னு இருக்கேன்“
”ஆஹா என்ன ஒரு கருணை என் மேல”
”எனக்கு எங்கப்பா ஞாபகம் வந்துடுச்சி”
”சூப்பர் அப்புறம் ஏன் நிக்கற கிளம்பு கிளம்பு”
”நியாயம் கொடு கிளம்பறேன்“
”ப்ச் அப்பா நினைப்பு வந்தா போகாம, என்கிட்ட நியாயம் கேட்கறது தப்பில்லையா”
”எனக்கு இங்க இருக்கவே பிடிக்கலை, நான் கிளம்பறேன் அதுக்கு நீ எனக்கு நியாயம் வழங்கனும் சீக்கிரமா வா என்கூட“
”எங்க” என்றான் ஆர்வமாக
”என் அப்பாகிட்ட வந்து மன்னிப்பு கேளு“