(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 06 - பிந்து வினோத்

   

This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.

  

கோபத்தில் அஜய் திட்டி விடுவானோ என்று யோசித்து, “அஜய், அஜய்!!! நம்ம வீட்டுக்கு வந்திருக்க விருந்தாளி!!! அமைதியா இரு!!! உனக்கு பெட்டியை தூக்குறது கஷ்டம்னா நான் வேணா...” என பேசிக் கொண்டிருந்த சாரதா முழுவதுமாக சொல்லி முடிக்கும் முன்,

   

“அம்மா!!!!!” என கடித்திருந்த பற்களின் இடையே கஷ்டப்பட்டு அழைத்தான் அஜய்!

   

புரிந்துக் கொண்டவளாக, “சரி, சரி, நீயே எடுத்துட்டு வா,” என்று அவனிடம் சொல்லி விட்டு,

   

ரோஹினியிடம், “நீ... நீங்க வாங்கங்க ரோஹினி,“ என உபசரிப்புடன் வரவேற்றப் படி கதவில் இருந்த பூட்டை திறத்து உள்ளே ரோஹினியை அழைத்து சென்றாள் சாரதா.

   

நேராக ரோஹினிக்காக தயார் செய்து வைத்திருந்த அறைக்கு தான் அவளை அழைத்துச் சென்றாள்.

   

அவர்களின் பின்னாலே பெட்டிகளை வேண்டா வெறுப்பாக தூக்கி கொண்டு வந்த அஜய், பெட்டிகளை அந்த அறையின் சுவரோரம் வைத்தான்.

   

“எனக்கான ரூம் எது? பெட்டியை இங்கே வைக்காதே, என் ரூம்ல வைக்கனும்,” என்றாள் ரோஹினி அதிகாரம் மின்ன!

   

“இது தான் ரோஹினிம்மா உனக்காக... உங்களுக்காக நான் தயார் செய்து வச்சிருக்க ரூம்,” என சாரதா சொல்லவும்,

   

“என்னது இதுவா???” என்றாள் ரோஹினி அதிர்ச்சியுடன்!

   

ரோஹினி காட்டிய ரியாக்ஷன் அஜய்க்கு மீண்டும் கோபத்தைக் கொடுத்தது.

   

அவர்கள் வீட்டிலேயே இருக்கும் பெரிய அறை அது!

   

அதிகம் புழங்காமல் இருந்த அறையில் சாரதா பொருட்களை போட்டு வைத்திருந்தாள். 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.