(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

சாரதா பொறுமையாக ரோஹினியை செல்லம் கொஞ்சி, கட்டிலில் அமர வைத்து விட்டு ஹால் பக்கமாக வந்தாள்.

   

"எங்கேருந்தும்மா இதை பிடிச்சுட்டு வந்தீங்க?" கடுப்புடன் கேட்ட அஜயை புன்னகையுடன் எதிர்க்கொண்டாள் சாரதா. 

   

"சின்ன பொண்ணுடா! எதுக்கு இவ்வளவு டென்ஷன் ஆகுற? பணக்கார வீட்டு பொண்ணு, கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்துக்கோ! அவளுக்கு நம்ம வீடு மாதிரி எல்லாம் பழக்கம் இருக்காது..."

   

"நான் எதுக்கு அட்ஜஸ்ட் செய்துக்கனும்? அதை... ப்ச்... அவளை வேணா அட்ஜஸ்ட் செய்ய சொல்லுங்க! இன்னொரு தடவை பெட்டியை தூக்கு, இங்கே வை, அது இதுன்னு என் கிட்ட சொல்லட்டும், அவ மண்டையிலேயே ஒன்னு போடுவேன்!" 

   

"ஹப்பா, என்ன கோபம் வருது உனக்கு! தினம் தினம் எக்சர்சைஸ் செய்து பாடி பில்டர் மாதிரி உடம்பை வச்சுட்டு ஒரு பத்து கிலோ பெட்டியை தூக்கிட்டு வர இப்படி மூக்கால அழுற? இதுவும் நல்ல எக்சர்சைஸ்ன்னு நினைச்சுக்கோ!"

   

கோபத்துடன் எதுவோ சொல்ல வந்த அஜய், புன்னகையுடன் மின்னிக் கொண்டிருந்த அம்மாவின் முகத்தை பார்த்து விட்டு வாயை மூடிக் கொண்டான்! 

   

சாரதாவின் உதட்டில் இருந்த புன்னகை பெரிதானது! 

   

கரடு முரடாக தோன்றினாலும், என் மகன் பாசக்காரன் என அவளின் மனம் அவனைக் கொண்டாடியது!

   

“இங்கே பாருடா கண்ணா, சித்தி சொல்லி நம்ம வீட்டுக்கு வந்திருக்க பொண்ணு! அதிகபட்சம் ஆறு மாசம் இருக்கப் போறா... அவ சொல்றதை சொல்லிட்டு போகட்டுமே... அவ வளர்ந்த விதம் அப்படி...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.