இப்போது இந்த சீமாட்டி வருவதற்காக தனி ஆளாக அவனுடைய அம்மாவே அந்த அறையில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தி, சுத்தபடுத்தி வைத்தால்... இவளென்ன...!!!???
கோபம் அதிகமாக,
“ஏய், நீ என்ன பெரிய மஹாராணியா???? இதை விட உனக்கு வேற என்ன ரூம் வேணும்?? இது பிடிக்கலைனா கிளம்பு... உனக்கு பிடிச்ச மாதிரி ஏதாவது ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்ல போய் தங்கிக்கோ,” என்றான் கோபத்தை குரலிலும் காட்டி!
அது போல அவளிடம் கோபமாக ஒருவர் அதட்டி பேசி கேட்டு பழக்கமே இல்லாத ரோஹினி அதிர்ந்து போய் நின்றாள்...
அவளின் முகம் சோகமாக முகத்தை வைத்துக் கொண்டு அழ தயாராக இருக்கும் சிறுக் குழந்தையின் முகத்தை நினைவுப்படுத்தியது.
ஆனால் அஜய் அதற்கு எல்லாம் மனம் இறங்குபவனாக இல்லை!
“உனக்காக வேலை மெனக்கெட்டு என் அம்மா ரூமை கிளீன் செய்து வச்சிருக்காங்க. நீ என்ன பெரிய இவ...”
“அஜய்!”
சாரதா அவனின் பேச்சின் நடுவே மீண்டும் குறுக்கிடவும், அரை மனதுடன் பேச்சை நிறுத்தினான் அஜய்.
மகனை விழிகளாலேயே அமைதிப் படுத்திய சாரதா, ரோஹினியிடம், “ரோஹினிம்மா நீ..ங்க இந்த கட்டில்ல உட்காரு...ங்க... நான் இவனை அனுப்பிட்டு வரேன்,” என்றாள்.
அஜய் அதற்கு மேல் அங்கே நிற்க பிடிக்காமல் உடனடியாக அங்கிருந்து நகர்ந்து சென்றான்.