(Reading time: 6 - 12 minutes)
Roja malare rajakumari (Edition 2)
Roja malare rajakumari (Edition 2)

   

“ஓ அஜயா.... அவனுக்கு நீ... நீங்க இளவரசின்னு தெரியாது... அதனால புரியாம பேசுறான்...! அரண்மனையில பிறந்து வளர்ந்துட்டு எங்க மிடில் கிளாஸ் வீட்டுக்கு வந்தா, எல்லாமே வேற மாதிரி தானே இருக்கும்...”

   

“நீங்க என்னை இப்படி ங்க போட்டு கூப்பிட வேண்டாம்...”

   

சாரதாவிற்கு ஆச்சர்யமாக இருந்தது! “அதென்ன ஏர்போர்ட்ல இருந்து வீட்டுக்கு வரதுக்குள்ளே மாற்றம்?” என தன் மனதை மறைக்காமலே கேட்டாள்!

   

“என் கிட்ட எல்லோரும் பொதுவா அப்படி தான் பேசுவாங்க. அதனால அப்போ சொன்னேன்... ஆனால் உங்க மகன் சொன்னது போல எனக்கு மரியாதை தெரிய தான் இல்லை... உங்க கிட்ட நான் அப்படி சொல்லி இருக்க கூடாது... யாருன்னே தெரியாத எனக்கு உதவுறவங்க நீங்க...”

   

“அச்சச்சோ! என்ன ரோஹினிம்மா இப்படி சோக கீதம்??? மரியாதை எல்லாம் மனசுல இருந்தா போதும்... ஆனால் நான் ஒன்னு சொல்லட்டுமா?” என்றாள் சாரதா ஆர்வத்துடன்!

   

அவளின் ஆவலினால் கவரப்பட்டவளாக, “என்னது?” என வினவினாள் ரோஹினி.

   

“உங்களுக்கு இந்த கொண்டை வேண்டாமே! அட்லீஸ்ட் இங்கே சென்னைல இருக்கும் போது வேண்டாமே!!!! நான் வேற மாதிரி தலை வாரி தரட்டுமா???” 

   

சாரதாவின் குரலில் கலந்திருந்த அதிகப் படியான ஆர்வம் ரோஹினியை வேண்டாம் என்று சொல்ல விடாமல் தடுத்தது!

   

“சரி... ஆனால் நீங்க இனிமேல் என் கிட்ட மரியாதைக் கொடுத்து பேச கூடாது...”

   

“சரிடாம்மா ரோஹினிம்மா!!! வாடா நான் உனக்கு தலை வாரி தரேன்...”

   

சாரதாவிற்கு தனக்கு இரண்டுமே ஆண் குழந்தைகள் ஆகி விட்டதே என்ற வருத்தம் கொஞ்சம் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.