(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”ஆமாம் அண்ணாவும் வர வர குடும்பஸ்தன் மாதிரியே பேசி வைக்கறாரு, நம்ம தொழிலுக்கு இப்படியிருந்தா சரியா வருமா என்ன”

   

”எப்படியோ அண்ணா பெரிய இடமாதான் பிடிச்சிருக்காரு”

   

”அண்ணா எங்க பிடிச்சாரு அந்த பொண்ணுதான் இவரை பிடிச்சிக்கிட்டு விட மாட்டேங்குது”

   

”ஜோடி பொருத்தம் அற்புதமா இருக்குல்ல“

   

”ஆமாமாம் இதோ அதோன்னு காதல் வரைக்கும் போயாச்சி, அடுத்தென்ன கல்யாணம்தானே”

   

”என்னது காதலா அது எப்ப நடந்துச்சி” என அவர்கள் பேசிக் கொண்டே தில்லையையும் சம்யுக்தாவையும் வைத்து பல கதைகளை கட்டிவிட்டார்கள். 

   

அது தெரியாமல் தில்லையும் பாட்டியை பார்க்க செல்வதற்கு முன் டாக்டரிடம் சென்று முதலில் வைத்தியம் பார்த்துக் கொள்ள வேண்டும் என நினைத்து நேராக அவனுக்கு மிகவும் வேண்டபட்ட டாக்டர் இருக்கும் வீட்டிற்குச் சென்றான்.

   

அந்த வீட்டின் முன் போலீஸ் ஜீப் இருக்கவே அதிர்ந்தாள் சம்யுக்தா

   

”அய்யோ போலீஸ் இருக்கு, நீ மாட்டிக்கப் போற“

   

”பயப்படாத அது சிவாவோட வீடுதான்”

   

”ஓ ஆமா இங்க ஏன் வந்த“

   

”டாக்டரை பார்க்கலாம்னு வந்தேன்“

   

”டாக்டரா, போலீஸ் வீட்ல இருக்காங்க“

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.