(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

   

”என்ன செய்ற நீ, விடு”

   

”முடியாது டாக்டர்கிட்ட போறப்ப இப்படி கண்டதெல்லாம் சாப்பிடக் கூடாது தப்பு”

   

”ஒரு வாரம் பயங்கர டென்ஷன் சம்யுக்தா, இதையாவது கொஞ்சம் எடுத்துக்கறேனே“

   

”முடியாது” என சொல்லியவள் அந்த பாக்கெட்டை விசிறியடிக்க அவனுக்கு கோபமே வந்தது

   

”அடிப்பாவி எதுக்கு இப்படி செய்ற, அதோட விலை என்ன தெரியுமா” என திட்டிக் கொண்டே கீழே சிதறியிருந்த பவுடர்களை அள்ளி எடுத்து வைக்க அவளோ

   

”கெட்ட விசயங்கள் எவ்வளவுதான் கோடிக்கணக்கான மதிப்பா இருந்தாலும், அதை யாருமே நல்லதுன்னு சொல்ல மாட்டாங்க”

   

”உன்கிட்ட என்ன பேசினாலும் நீ இப்படிதான் பேசிவைப்ப, கிளம்பு போலாம்” என சொல்லிவிட்டு பத்திரமாக அந்த பாக்கெட்டை உள் அறையில் சென்று வைக்க அவளோ உள்ளே சென்று பார்த்து அலறினாள்

   

”சீ சீ இதையெல்லாம் என் ரும்ல வைக்காத”

   

”ஹலோ இது என் வீடு, என் ரூமு, உனக்கென்ன வந்தது, எப்படியும் இன்னிக்கே நீ கிளம்பலாம்னு முடிவு பண்ணிட்டல்ல, எது எங்கிருந்தா உனக்கென்ன கிளம்பு வா” என அவளை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.

   

அவனது ஜீப்பில் இருவரும் ஏறிக் கொண்டு செல்வதை அங்கிருந்த அவனது ஆட்கள் கண்டு சிரித்தனர்

   

”இவங்களை பார்த்தா சரியில்லையே, சண்டை போட்டுக்கிட்டே ஒண்ணா ஒரே வீட்ல குடும்பம் நடத்தறாங்க”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.