”அண்ணா பாரு ஒஸ்தி சரக்கு, வித்தா கோடியில பணத்தை அள்ளலாம், இதுக்கான ஆளுங்களை பிடிக்கவா சொல்லு கைவசம் நிறைய பேர் இருக்காங்க“
“பொறுடா இது எல்லாம் கஸ்டம்ஸ்ல மாட்டின சரக்கு, இப்ப இதை வித்தா சரியா வராது, ஒரு வாரம் போகட்டும் அப்புறம் பார்க்கலாம்“
”சரி சரி என்னிக்குன்னு சொல்லு, பார்ட்டியை நான் கூட்டிட்டு வரேன்”
”இங்க வைச்சி எதுவும் செய்யாத, இது குடும்பம் நடத்தற வீடு புரியுதா, சரக்கை கைமாத்தற வேலையை வெளியே வேற எங்கயாவது வைச்சிக்க” என சொல்ல அவனோ சம்யுக்தாவையும் தில்லையையும் மாறி மாறிப் பார்த்து நமட்டுச் சிரிப்பு சிரித்துவிட்டு தனது ஆட்களை அழைத்துக் கொண்டு வெளியேறினான்.
அவன் சென்றதும் தில்லை ஆர்வமாக அந்த கஞ்சாவை பிரித்து பார்த்து மோப்பம் பிடித்து
”ஆஆஆ சொர்க்கம்” என சொல்லிக் கொண்டே சம்யுக்தாவிடம் நீட்டினான்
”சம்யுக்தா பாரு ஒஸ்தி சரக்கு, கொஞ்சம் போட்டா கூட போதும் சொர்க்கத்தில மிதக்கலாம் வேணுமா”
”சீ சீ எனக்கு வேணாம்”
”ப்ச் இது போல நல்ல சரக்கு எப்பவோதான் வரும் சம்யுக்தா, கலப்படமில்லாத ஒஸ்தி கஞ்சா, சும்மா டேஸ்ட் பண்ணிப்பாரேன்”
”எனக்கு வேணாம் என்னையும் உன்னை மாதிரி ஆக்காத கிளம்பு நேரமாச்சி” என சொல்ல அவனோ
”எதுக்கு அவசரப்படுத்தற டாக்டர்கிட்டதானே போலாம் இரு” என சொல்லியவன் சிறிது கஞ்சாவை ருசிக்க முயல அவளோ அதைத் தடுத்தாள்