(Reading time: 6 - 11 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”போன்ல வேணா கேட்கறேனே” என கெஞ்ச அவளோ

   

”முடியாது” என்றாள் காட்டமாக

   

”அப்ப என்னாலயும் வர முடியாது” என சொல்ல அவளோ திட்டத் தொடங்கினாள். 

   

அது ஏதோ பாராட்டு மழையாக நினைத்து மகிழ்ச்சியாக அவளை பார்த்தபடியே கேட்டுக் கொண்டிருந்தான். சித்தனும் அவனது ஆட்களும் பெரிய பெரிய பார்சல் அட்டை பெட்டிகளுடன் வந்தார்கள், இங்கு தில்லையை சம்யுக்தா திட்டுவதையும், அதை ரசித்து கேட்டு தலையாட்டிக் கொண்டிருந்த தில்லையை கண்டு திகைத்தவர்கள் கலகலவென சிரித்தார்கள். அதில் தில்லை மற்றும் சம்யக்தாவின் கவனம் மாறியது

   

”என்னடா அங்க சிரிப்பு” என தில்லை கேட்க அதற்கு சித்தனோ

   

”உன் நிலைமையை பார்த்து சிரிப்பா இருக்கு அண்ணா, எத்தனை ரௌடிகளை கொன்னிருப்ப, இங்க இவங்க கிட்ட உன்னால ஒண்ணுமே செய்ய முடியலையே”

   

”ரௌடிங்க எல்லாரும் கெட்டவங்கடா ஆனா, இவள் நல்லவளாச்சே என்னால இவளை எதுவும் செய்ய முடியலை, அதான் அமைதியா இருக்கேன்”

   

”இருந்தாலும் இவங்க கிட்ட நீ திட்டு வாங்கறத பார்க்கறப்ப சிரிப்பா வருது”

   

”ஏன் உன் வீட்ல உன்னை இப்படி திட்டினதில்லையா”

   

”அதுவும் இதுவும் ஒண்ணா அண்ணா”

   

”எல்லாம் ஒண்ணுதான் போடா போய் வேலையை பாரு” என சொல்ல அவர்களே ஓஹோ என பாட்டு பாடிவிட்டு உள் அறைக்குச் சென்று தாங்கள் கொண்டு வந்த பெட்டிகளை அடுக்கினார்கள். சித்தனோ அந்த பெட்டியை பிரித்து அதிலிருந்து கஞ்சா பொட்டலத்தைக் கொண்டு வந்து தில்லையிடம் காட்டினான்

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.