“எனக்கா... மறை கழண்ட கேஸ், சரியான கிறுக்குன்னு தோணுது,” என்றாள் சினேகா சிரிப்புடன்!!
✽✽✽
எப்போதும் போல தன்னுடைய corridor வழியில் வந்த ஆகாஷ், அங்கே அவனின் கண் முன் தெரிந்த காட்சியில் அதிசயித்துப் போனான்.
சினேகா கையில் ஃபோனுடன் கண்ணாடி சுவரின் வழியே தெரிந்த வெளி உலகை வேடிக்கை பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்! அவனுக்கு முதுகு காட்டி நின்றிருந்ததால் அவன் வருவது அவளுக்கு தெரிந்திருக்கவில்லை!
ஆகாஷ் இருந்த இடத்தில் இருந்து பார்க்கும் போது, கண்ணாடி வழியே தெரிந்த தூரத்து பூங்காவின் பச்சை பசேல் + மலர்கள் பேக்கிரவுண்டிற்கு ‘பெர்பெக்ட் செட்டிங்’ என்று சொல்லும் விதத்தில், சினேகாவும் பச்சை நிறத்தில் சிறிய பிங்க் பார்டர் வைத்த அழகிய சேலையை அணிந்திருந்தாள்!
மனதினுள் ஒரு விதமான இதம் பரவுவதை உணர்ந்த ஆகாஷ், அவனை போலவே அவளும் இயற்கையை பார்த்து ரசிக்கிறாளே என்றும் வியந்தான். ஆனால் உடனேயே மனதை மாற்றிக் கொண்டான்!
சினேகா அங்கே நிற்கிறாள் என்ற ஒரே காரணத்தை வைத்து இயற்கையை ரசிக்கிறாள் என்று எப்படி சொல்ல முடியும்? கையில் மொபைல் ஃபோனுடன் நிற்கிறாளே ஒரு வேளை இந்த இடத்தில் தான் மொபைல் சிக்னல் நன்றாக வரும் என்று நிற்கிறாளோ என்னவோ!
மனதில் ஓடிய யோசனையுடன் அவன் நடக்க, அவனின் ஷூ எழுப்பிய ஓசைக் கேட்டு திரும்பி பார்த்தாள் சினேகா.
பளிச்சென்ற ஒரு புன்னகையுடன்,