அன்று மாலையில் நடைப்பெற்ற மீட்டிங்கில் அவர்கள் கம்பெனியில் தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்த பல்வேறு ப்ராஜக்ட்களின் ஸ்டேடஸ் பற்றி ஒவ்வொருவராக சுருக்கமாக ஆகாஷிடம் பகிர்ந்துக் கொண்டிருந்தார்கள். அதில் சினேகாவின் ப்ராஜக்ட் பற்றிய குறிப்பும் இடம் பெற்றது.
“நம்ம பார்க்கிங் ப்ராஜக்ட் சார். இன்னும் ரொம்ப இனிஷியல் ஸ்டேஜ்ல தான் இருக்கு. பில்டிங் ப்ளான் ரெடி செய்ய கே.ஆர் ஆர்கிடெக்ட்ஸ்ல இருந்து வந்திருக்க சினேகாவும் நானும் நம்ம சைட்டை நேரடியா ஒருதடவை விசிட் செய்றதுன்னு முடிவு செய்திருக்கோம். இந்த வீக் முழுக்க நான் மத்த ப்ராஜக்ட்ஸ்ல பிஸியா இருக்கேன். அதனால நெக்ஸ்ட் வீக் போல தான் அவங்களோட சைட் விசிட் போக முடியும்,” என்று விளக்கம் அளித்தான் அந்த ப்ராஜக்ட்டை ஆகாஷ் ரீடேயிலர்ஸ் சார்பாக தலைமை தாங்கும் பிரபாகர்.
சினேகா என்ற பெயரை கேட்ட உடனேயே காலையில் அவளை சந்தித்த காட்சி ஆகாஷின் கண் முன் பளிச்சிட்டு சென்றது!
“தட்ஸ் ஓகே பிரபா! ப்ளான் ரெடியான உடனே என்னோட டிஸ்கஸ் செய்ங்க,” என்று சொல்லி விட்டு அடுத்த ப்ராஜக்ட் பற்றி கேட்க துவங்கினான் ஆகாஷ்...
✽✽✽
அதன் பின் வந்த அந்த வார நாட்களில், ஒரு நாளுமே சினேகா ஆகாஷின் கண்ணில் படவில்லை.
ஒவ்வொரு நாள் காலையிலும், அந்த காரிடாரின் பக்கம் வரும் போது அவனின் மனம் அவளை அங்கே எதிர்பார்ப்பதை அவனால் தவிர்க்க முடியவில்லை. ஆனால் அவனுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைத்தது!
வெள்ளி அன்றும் சினேகா அங்கே வராமல் போகவும், அவன் நினைத்ததுப் போல அன்று ஃபோன் பேச தான் இங்கே வந்திருப்பாள் என்ற முடிவிற்கு தான் அவனால் வர முடிந்தது!