(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

தொடர்கதை - மலர்கள் நனைந்தன பனியாலே... - 41 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ன்ம்மா நேத்து அப்படி செஞ்சீங்க????” உதய் கோபம், வருத்தம் என எந்த உணர்ச்சியையும் கலக்காமல் அமைதியாக தான் அந்த கேள்வியை ரேவதியிடம் கேட்டான்!

   

ரேவதி மனதில் இருந்த யோசனைகளை பின்னே தள்ளி விட்டு, மகனின் முகத்தில் என்ன இருக்கிறது என்ற கேள்வியுடன் அவனை பார்த்தாள். அவனிடம் கோபம் இல்லை என்பது புரியவும்,

   

“என்னடா, அந்த நந்திதா உன் கிட்ட என்ன கதை சொன்னா????” என்றாள் கிண்டலாக!

   

உதய் ரேவதியின் திறனையில் எல்லாம் திசை மாறி விடவில்லை!

   

முன்பு போலவே அமைதியானக் குரலில், “குட்மா... நீங்களே நேரா விஷயத்துக்கு வந்துட்டீங்க... நீங்க நினைக்குற மாதிரி அவ என் கிட்ட எதுவும் சொல்லலை... எனக்கு இந்த விபரம் சொன்னது துளசி அண்ணி,” என்றான்.

   

“துளசியா????”

   

“ஆமாம்... உங்க செல்ல துளசி தான் சொன்னாங்க... ஏன்ம்மா அப்படி செஞ்சீங்க????”

   

“வேறென்ன செய்ய சொல்ற உதய்? ஆரத்தி எடுத்து வீட்டுக்கு அழைச்சுட்டு வர சொல்றீயா???”

   

“அப்படி செஞ்சிருந்தீங்கன்னா ரொம்ப சந்தோஷப் பட்டிருப்பேன்... இந்த தடவையாவது எனக்கு பிடிச்சதை நீங்க அக்ஸப்ட் செய்துக்குறீங்களேன்னு நினைச்சிருப்பேன்...”

   

 “உதய்!!!! உனக்கு பிடிக்காதது எதை நான் செய்திருக்கேன் சொல்லு? நீ தானே எனக்கு பிடிச்ச பொண்ணை தான் கல்யாணம் செய்துப்பேன்னு சொன்ன?”

   

“யெஸ்... ஆனால்...”

   

“இப்படி மாத்தி பேசக் கூடாதுப்பா...”

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.