(Reading time: 6 - 12 minutes)
Malargal nanainthana paniyale
Malargal nanainthana paniyale

அவனின் அறைக்கு திரும்பி சென்ற போது, வந்த காரியம் சரியாக நடந்து முடிந்த சந்தோஷம் அவனுள் இருந்தது!

   

✽✽✽

   

து தான் ப்ரெயின் வேலை செய்ய காரணமா இருக்க சிப்... இதுல இருக்க ப்ரோக்ராம் தான் நாம கொடுக்குற கமாண்ட்ஸ்க்கு ஏத்த மாதிரி அந்த ரோபோவை வேலை செய்ய வைக்கும்...”

   

தன் முன் இருந்த சர்க்யூட்டின் ஒரு பகுதியை விரலால் சுட்டிக் காண்பித்து, விளக்கம் கொடுத்துக் கொண்டே எதிரே அமர்ந்திருந்த உதயை பார்த்தாள் நந்திதா...

   

உதய் அவளை தான் பார்த்துக் கொண்டிருந்தான்...

   

ஆனால் அவள் சொல்வதை கேட்பவனைப் போல தெரியவில்லை... ஏதோ உலக அதிசயமான பொருளை பார்ப்பவன் போல அவளை பார்த்துக் கொண்டிருந்தான்!!!

   

உதயின் அந்த பார்வை நந்திதாவை என்னவோ செய்தது...

   

என்ன மாதிரியான பார்வை இது!!! விட்டால் விழிகளாலேயே அவளை விழுங்கி விடுவான் போலும்...!

   

அவள் இப்போது முறைக்க வேண்டுமா, இல்லை கோபப் பட வேண்டுமா???

      

இதயம் தாறுமாறாக பட படக்க, மூளை யோசிக்க மாட்டேன் என்று சண்டித் தனம் செய்ய, குழப்பத்துடன்,

   

“உங்களுக்கு புரியுதா...?” என்று எப்படியோ கேட்டு வைத்தாள்...!

   

பக்கத்தில் இருந்த மேஜை மீது கையை மடித்து வைத்து கன்னத்தில் வைத்த உதய்,

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.