கேள்விகள் இருக்கு... சரியான்னு கேட்டார்...”
“அப்படியா???”
“எனக்கு இதுல எல்லாம் நம்பிக்கை இல்லை, அதனால நான் அவர் கிட்ட ஒன்னும் சொல்லலை... ஆனால் அவராவே என் கிட்ட ஒன்னு சொன்னார்...”
“என்ன சொன்னார்?”
“வாழ்க்கைல சில சமயம் இது ஏன் இப்படின்னு நமக்கு கேள்விகள் தோணலாம்... அதெல்லாம் கடவுள் போட்ட திட்டம்... நமக்கு புரியாமல் இருக்கலாம்... ஆனால் அவனுக்கு தெரியும் இது தான் நமக்கு சரின்னு... அவனை விட நான் புத்திசாலின்னு யோசிச்சு சந்தோஷமான வாழ்க்கையை தொலைச்சிறாதேன்னு சொன்னார்...”
“ஓ!”
“நான் பதிலா ஓரு வார்த்தை கூட பேசலை... ஆனால் அவர் சொன்னது எனக்காகவே சொனனது போல இருந்தது... எனக்கு ஏன் நந்திதா மேல அன்பு தோணுதுன்னு தான் அப்போ நிஜமாவே குழப்பத்துல இருந்தேன்...”
ரேவதி மீண்டும் மகனை சந்தேகத்துடன் பார்த்தாள்!
“இதை எல்லாம் நீ இவ்வளவு நாளா என் கிட்ட சொல்லவே இல்லையே... இப்போ தானே சொல்ற??? நிஜமாவே உண்மை தானா???”
“நான் நந்திதா கிட்ட என் மனசுல இருக்குறதை பத்தி நேரடியா பேசிட்டு, அப்புறம் உங்க கிட்ட சொல்லலாம்னு இருந்தேன்ம்மா... ஆனாலும் என்ன ஏதுன்னு என் கிட்ட கேட்காம இப்படியா போய் அவளை திட்டுவீங்க???? ஏன்மா???? நீங்க ரொம்ப நல்லவங்கன்னு எனக்கு தெரியும்... ஆனால் சில சமயம் ஏன் இப்படி நடக்குறீங்கன்னு எனக்கு புரியலை...”
ரேவதி பதில் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருந்தாள்!