(Reading time: 6 - 12 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 18 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ரு சில வினாடிகள் இமைக்காமல் சரண்யாவையே பார்த்த மித்ரன், பின் தலையை திருப்பி மைத்ரேயியை பார்த்தான்...

   

அண்ணன் சொல்லாமல் சொன்ன செய்தியை புரிந்துக் கொண்டவளாக, சரண்யாவின் பக்கத்தில் வந்த மைத்ரேயி,

   

“என்ன ஆச்சு சரண்யா...?” என்று கனிவுடன் கேட்டாள்...

   

“ஒன்னுமில்லை... மேடம்,” என்று சொன்னபோது சரண்யாவின் கண்ணீர் அவளின் இமை தடையையும் தாண்டி வெளியே வந்திருந்தது...

   

“சரண்யா...?”

   

“இன்னைக்கு... அவரோட... கோபியோட பர்த் டே... அது என்னவோ காலைல இருந்தே மனசு சரியில்லை... அவரோட கையெழுத்தை இப்போ பார்க்கும் போது...” மேலே பேச முடியாமல் விசும்பினாள் சரண்யா...

   

மைத்ரேயி புரிந்துக் கொண்டவளாக சரண்யாவை மெல்ல அணைத்து ஆறுதல் சொல்ல, மித்ரன் அசையாமல் அப்படியே நின்றான்...

   

அவனுடைய கையிலிருந்த ஃபைலில் சரண்யாவின் போட்டோ இருப்பது அவனுக்கு நன்றாகவே நினைவு இருந்தது...

   

ஆனாலும் அதை வெளியே எடுத்து சரண்யாவிடம் கொடுக்க எதனாலோ அவனுக்கு மனம் வரவில்லை...

   

ஃபைலை மூடியவன், தங்கையிடம்,

   

“எனக்கு வேலை இருக்கு... நான் கிளம்புறேன் மைத்தி,” என்று மெல்ல சொல்லி விட்டு, மைத்ரேயியின் பதிலுக்கும் காத்திருக்காமல் அந்த அறையில் இருந்து தன் வழக்கமான வேக 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.