வேகமாக நடந்து கொண்டிருந்தவள், ரோட்டோரத்தில் நின்றிருந்த இரண்டு இளைஞர்களை கவனித்து ஒதுங்கி அதே வேகத்துடன் நடந்தாள்!
“அழகான பொண்ணுங்க கஷ்டப் பட்டா என் மனசு தாங்கவே தாங்காதுடா...”
“ஆனா இது ஃபேமிலி பேக்கேஜ் டா... கூடவே சின்ன பொண்ணு ஒன்னு இருக்கு...”
“அது எல்லாம் பிரச்சனை இல்லை... கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்தா போதும்... நான் ரொம்ப அட்ஜஸ்ட் செய்துப்பேன். என் மனசு ரொம்ப பெருசுடா.”
வேகமாக நடந்தாலும், அவளுக்கு பக்கத்தில் ஒலித்துக் கொண்டிருந்த அந்த பேச்சு சரண்யாவின் காதுகளை எட்ட தான் செய்தது! ஆனாலும் திரும்பி பார்க்காமல் அந்த பேச்சு காதில் விழாதது போல நடந்தவள், மெல்ல, மெல்ல, தன் நடையின் வேகத்தை மட்டும் அதிகப் படுத்தி நடந்தாள்...
இன்று மட்டும் என்று இல்லாமல், கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து நடந்துக் கொண்டிருக்கும் விஷயம் இது... அந்த இருவரில் ஒருவன் அவள் வீட்டின் பக்கத்தில் குடி இருக்கும் பழனி என்பதை அவனின் குரல் வைத்து அவளால் கண்டுபிடிக்க முடிந்தது...
இன்னொருவன் யார் என்றே அவளுக்கு தெரியவில்லை...
திரும்பி பார்க்கவும் அவளுக்கு பயமாக இருந்தது...
சரண்யா வேகத்தை அதிகரித்ததை தெரிந்துக் கொண்டு அதற்கும் அசிங்கமான கமன்ட் கொடுத்தவர்கள், அத்துடன் நிற்காமல் அவளை உரசிக் கொண்டு செல்வதை போல தாண்டி செல்லவும், சரண்யா பயத்தில் நடு நடுங்கிப் போனாள்...
ஆனால், வீட்டின் பக்கத்தில் இருந்ததால் எப்படியோ சமாளித்து நடந்து சென்றாள்...
சுலோசனாவின் வீட்டின் வாசலில் நின்று அவள் குரல் கொடுத்ததும், நிஷா ஓடி வந்து