(Reading time: 7 - 14 minutes)
Endrendrum unnudan
Endrendrum unnudan

Chillzee Originals : தொடர்கதை - என்றென்றும் உன்னுடன்... - 26 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ஹேமா ரேஷ்மியிடம், “இன்னும் நீ பெரிய பெரிய உயரத்துக்கு போகனும் ரேஷு கண்ணா... உன் அம்மா கட்டாயம் சொர்கத்துல இருந்து உன்னை பார்த்து சந்தோஷப் பட்டுட்டே தான் இருப்பா... ஆமா, உன் அப்பா எங்கே???” என வாழ்த்தி, பின் கேள்வியுடன் முடித்தாள்.

   

அப்பா என்றதும், ரேஷ்மி முகத்தை சுளித்தாள்... ஆனால் அவள் வாய் திறந்து பேசும் முன், ரோஷனி, “கூட்டத்துல இருந்தார்... பார்த்தேன்... ஃபங்க்ஷன் முடிஞ்சு வெளியே வந்து தேடினா ஆளையே காணும்,” என்றாள். 

   

ஹேமாவின் பக்கத்தில் இருந்த ரேஷ்மியின் முகத்தை பார்த்து விட்டு, “ரேஷ்மி, வீட்டுக்கு போன உடனே நீ அப்பா காலிலேயும் விழுந்து ஆசீர்வாதம் வாங்கு,” என்றாள் ரோஷனி.

   

ரேஷ்மி ஆம் என்றும் இல்லாமல், இல்லை என்றும் இல்லாமல் பொதுவாக, பேருக்கு தலை அசைத்து வைத்தாள்...

   

மற்றபடியும் அவளுக்கு விமலும், பூங்கோதையும் பரிந்துக் கொண்டு வந்தார்கள்...

   

“ஆமா... அவ போய் கால்ல விழுந்தா மட்டும் அவன் அப்படியே சந்தோஷப் படுற மாதிரி தான்... அவன் என்ன மாதிரியான மனுஷன்னே புரியலை...”

   

“ரேஷ்மி முகம் எப்படி சந்தோஷத்துல ஜொலிக்குது... இன்னைக்கு எதுக்கு அண்ணனை பத்தி பேசி அவ மூடை ஸ்பாயில் செய்ற?”

   

ரோஷனி கோபத்தை அடக்க முயற்சிக்கவும், கவிதா அவளை புரிந்துக் கொண்டவளாக, “அந்த ஹிட்லர் விட்டு தள்ளி இருக்குறது தான் அண்ணி எல்லோருக்குமே நல்லது... நாம எல்லாம் அப்படி இருக்குறதல தான் அவன் கத்தாம அமைதியா இருக்கான்... அவன் முன்னாடி அம்மா கிட்ட எப்படி பேசினான் தெரியுமா,’ என்றாள்!

   

ஆமோதித்து தலையை ஆட்டிய பூங்கோதை, “ம்ம்ம்... என்ன இருந்தாலும் என் மகனாச்சே, சுமித்ராக்கு அப்புறம் தனியா இருக்கானேன்னு வேற கல்யாணம்னு பேச்சை ஆரம்பிச்சேன்... அவ்வளவு தான்... அம்மான்னு கூட மரியாதை இல்லாம அப்படி கோபப் பட்டுட்டான்! அதான் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.