நான் அவன் கிட்ட இருந்து ஒதுங்கியே இருக்கேன்,” என்றாள்!
“நல்லதா போச்சும்மா! இல்லன்னா இன்னொருத்தி வந்து அவன் கிட்ட மாட்டிட்டு முழிச்சுட்டு இருந்திருப்பா,” என்றான் விமல்!
ரோஷனி மாமியாரை விட்டு விட்டு கணவனை கோபமாக பார்த்தாள்...
அதை கவனித்த பூங்கோதை, பேச்சை மாற்றும் எண்ணத்துடன்,
“கிளம்புவோமா ஹேமா? உனக்கு பிடிச்ச எல்லாத்தையும் ரெடியா சமைச்சு வச்சுட்டு தான் கிளம்பினேன்,” என்று ஹேமாவிடம் கேட்டாள்.
“என்னம்மா நீங்க? இப்படி எல்லாம் கஷ்டப் படாதீங்கன்னு எத்தனை தடவை சொல்லிட்டேன்,” என்றாள் ஹேமா கரிசனத்துடன்!
“க்கும்.... இதெல்லாம் சும்மா பேச்சுக்கு சொல்றது பாட்டி... உண்மைன்னு நம்பிடாதீங்க... நாலு நாளாவே உங்க ட்ரீட்க்காக சரியா சாப்பிடாம இருந்து ரெடியா வந்திருக்காங்க எங்கம்மா,” என்று கிடைத்த சின்ன கேப்பில் அம்மாவை கேலி செய்தாள் ராகவி...
ஹேமா பொய்யாக மகளை பார்த்து முறைக்க, ரேஷ்மியும், ராகவியும் உற்சாகத்துடன் ஹை-5 கொடுத்துக் கொண்டார்கள்...
தொடர்ந்து பெரியவர்கள் வீட்டிற்கு கிளம்புவது பற்றி பேச, ராகவி, ரேஷ்மியிடம்,
“என் அண்ணனை இப்படி ராக்கிங் செய்றீயே.... பாவம் அவன் வேர்த்து விறுவிறுத்து போயிட்டான்... நல்ல வேளை மயக்கம் போட்டு விழலை,” என்று கிசுகிசுத்தாள்...
ரேஷ்மி சத்தம் போடாமல் சிரித்தாள்...
“நீ பயங்கர ஷார்ப் கவி... எல்லாத்தையும் கவனிக்குற.....!!!!”