(Reading time: 8 - 15 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

Chillzee Originals : தொடர்கதை - மாலையில் யாரோ மனதோடு பேச... - 19 - பிந்து வினோத்

  

This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.

  

ழக்கம் போல, தன் கம்பெனியில் ஒவ்வொரு பகுதியாக பார்வையிட்டுக் கொண்டிருந்த மைத்ரேயி, சரண்யாவின் டெஸ்க் காலியாக இருக்கவும், அதற்கு பக்கத்து டெஸ்கில் இருந்த விஜயிடம் சரண்யாவை பற்றி விசாரித்தாள்...

   

“அவங்க இரண்டு நாள் லீவ் சொல்லி இருக்காங்க மேடம்... ஃபீவர்ன்னு ஃபோன் செய்து சொன்னாங்க,” என்றான் விஜய்.

   

“ஓகே,” என்று சொல்லிவிட்டு  தன் வேலையை தொடர்ந்தாலும், மைத்ரேயிக்கு சரண்யாவை பற்றிய கவலை மனதுள் இருந்துக் கொண்டே இருந்தது...

   

தன்னுடைய அறைக்கு வந்த உடன், சரண்யாவின் செல் நம்பரை தேடி எடுத்து அழைத்தாள்...

   

“ஹலோ,” என்ற புதிய குரல் கேட்டது...

   

“நான் மைத்ரேயி பேசுறேன்... சரண்யா இருக்காங்களா?”

   

“ஓ, மைத்ரேயி, நீதானாம்மா... நான் சுலோச்சனா... சரண்யா வீட்டு பக்கத்துல இருக்கேன்...”

   

“நீங்க தானா...!!! அதானே குரல் தெரிஞ்ச மாதிரி இருக்கேன்னு பார்த்தேன்... சரண்யாவுக்கு ஃபீவர்ன்னு சொன்னாங்க... இப்போ எப்படி இருக்கா?”

   

“ஜுரம் குறையலைம்மா... ஜாஸ்தியா தான் இருக்கு... பக்கத்துல இருக்க டாக்டர் கிட்ட போய் மருந்து வாங்கிட்டு வந்தா... அவளுக்குன்னு எல்லாம் வந்து சேருது பாரு...”

   

“என்ன சொல்றீங்க?”

   

“அம்மா, அப்பா பொத்தி பொத்தி வளர்த்திருக்காங்க... அப்புறம் கோபி இருந்தப்பவும் அதே மாதிரி பார்துக்கிட்டான்... ஆனால், இப்போ எல்லாத்தையும் அவளே செய்ய வேண்டி இருக்கே... பாவம்...”

   

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.