Chillzee Originals : தொடர்கதை - என் மேல் உன்றனுக்கெத்தனை அன்படி - 39 - சசிரேகா
This is a Chillzee Originals Novel episode. Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
தில்லையிடம் சென்ற சம்யுக்தாவும் அவனையே கவனமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.
இங்கு சம்யுக்தாவிற்கு நேரமே போகவில்லை, அந்த வீட்டில் நிறைய நியூஸ் பேப்பர்கள் இருப்பதைக் கண்டாள், தில்லையும் தினசரி செய்தித்தாள் வாங்குவது வழக்கம், தன்னைப் பற்றியோ அல்லது எதிரியைப் பற்றியோ செய்திகள் வெளி வந்திருக்கிறதா என தெரிந்துக் கொள்ளவே தினமும் வாங்கிப் பார்ப்பான்.
இங்கும் இறைந்துகிடந்த செய்திதாள்களைக் கண்டு நொந்துப் போன சம்யுக்தாவோ போர் அடிப்பதற்கு என்ன செய்வதென தெரியாமல் அங்கிருந்த செய்தித்தாள்களை படிக்கலானாள்.
அதில் கடைசி பக்கத்தில் சின்ன பெட்டி செய்தியாய் தில்லையை போலீசார் வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறார்கள், இன்னும் பிடிபடவில்லை, தலைமறைவாகாமல் தப்பித்து செல்ல விடாமல் போலீசார் அதரடி சோதனையில் இறங்கியுள்ளனர், விரைவிலேயே தில்லையை கைது செய்வோம் என போலீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது என இருந்தது.
அதைக் கண்டு திகைத்தாள். அவசரமாக மற்ற பேப்பர்களை எடுத்துப் பார்த்தாள். அதிலும் ஓரமாக ஒரு சின்ன செய்தியாக தில்லையை பற்றி இருந்தது
”தில்லை பெரிய ரௌடி, தாதான்னு சொல்றாங்க ஆனா, இங்க என்னடான்னா சாதாரண பெட்டி செய்தி போல போட்டிருக்காங்களே, எத்தனை பேர் இந்தச் செய்தியை பார்ப்பாங்க, மக்கள் கிட்ட விழிப்புணர்வு தராம இருக்காங்களே, இந்த தில்லையால இன்னும் எத்தனை பேர் கஷ்டப்படப் போறாங்களோ, இவனுக்கு போலீசும் உதவி செய்றதாலதான் இவனோட அராஜகம் தொடர்ந்து நடந்துக்கிட்டே இருக்கு, என்னிக்கு இதுக்கு முற்றுப்புள்ளி வைப்பாங்களோ” என புலம்பிக் கொண்டிருந்தாள்.
மறுபக்கம் சம்யுக்தாவின் தந்தை சிவசங்கரனோ மகளைப் பற்றி விசாரித்தார். அவர் உடல் நிலை இப்போது தேறிவிட்டது ஆனாலும் இதயத்தில் ஆப்ரேஷன் நடந்ததால் மருத்துவமனையிலேயே தங்க வைத்திருந்தனர். அவர் முழுமையாக குணமாகும் வரை மருத்துவமனையிலேயே இருக்க வேண்டும் என டாக்டர் சொன்னதால் அனைவரும் அங்கிருந்தார்கள்