”தொழில் எதிரியா கூட இருக்கலாமே”
”இல்லை இந்த தில்லைங்கற பேரை நான் இப்பதானே கேட்கறேன், தில்லை எனக்காக இந்த கல்யாணத்தை நிறுத்தலை”
”அப்ப சம்யுக்தாவால அவனுக்கு ஏதாவது பிரச்சனை வந்து அதனால பழிவாங்க நினைச்சி இப்படி செஞ்சிருக்கலாம்“ என கைலாசம் சொல்ல அதற்கு சிவசங்கரன்
”இல்லை அப்படியிருந்தா என்னை ஏன் காப்பாத்தனும், தானா வந்தவளை விரட்டாம எதுக்காக பத்திரமா வைச்சிருக்கனும்”
”இப்ப என்னதான் சொல்ல வர்றீங்க”
”ஏதோ இருக்கு, சம்யுக்தா இந்த கல்யாணம் செஞ்சிக்க கூடாதுன்னு தில்லை நினைச்சிருக்கான்”
”ஒருவேளை நம்ம பொண்ணு அழகா இருக்கா, வசதியா இருக்கா, அதனால அவள் மேல ஆசைப்பட்டு இப்படி செஞ்சானா என்ன”
”இல்லை சம்யுக்தா வேணும்னா அவனே தேடிவந்து என்கிட்ட பேசியிருக்கலாம், இந்த கல்யாண ஏற்பாடுகளே நடந்திருக்காது, அவனே தாதான்னா சம்யுக்தாவை தூக்கிட்டு போய் கல்யாணம் பண்ணியிருக்கலாமே ஆனா, அப்படி எதுவும் செய்யலையே”
”என்ன நீங்க இப்படி குழப்பறீங்களே”
”இதுல குழம்ப எதுவும் இல்லை, நான் பார்த்த மாப்பிள்ளைதானே இந்த கல்யாணத்தை நிப்பாட்டினது. முதல்ல அவனை பத்தி விசாரிச்சா விசயம் தெரிஞ்சிடும்“
”விசாரிச்சிதானே இந்த கல்யாணத்துக்கே ஏற்பாடு செஞ்சது”