(Reading time: 11 - 22 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

உங்களுக்குன்னு ஒரு புது வாழ்க்கையை தொடங்குங்க, தில்லையை மறந்துடுங்க“

   

”இல்லை அது என்னால முடியாது ஆபிசர் எனக்கு தில்லைதான் வேணும்“

   

“தில்லைகிட்ட அப்படி என்ன இருக்கு, ஒரு பக்கம் அவன் ரொம்ப கெட்டவன், இன்னொரு பக்கம் ஏதோ தன்னை காதலிச்ச பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க விரும்பாம தன் நண்பனுக்கு கல்யாணம் செஞ்சி வைச்சிட்டான்னு அவனை நல்லவனா நீங்க நினைக்கறது தப்பு”

   

”இளங்கோவன் விசயத்தில என்னை காப்பாத்தினாரே”

   

”அது இன்னும் நிரூபிக்கப்படலையே, தில்லை சொன்னான், ஜனனி சொன்னாங்க அவ்ளோதானே, இளங்கோவை நான் தேடறேன், விசாரிக்கிறேன், அப்படியே அவன் கெட்டவனா இருந்தாலும் நீங்க தில்லைகூட வாழ நினைக்கறது முட்டாள்தனம்”

   

”ஏன் அப்படி சொல்றீங்க தில்லை கெட்டவர்ன்னு நான் முதல்ல நம்பினேன் அப்புறம் அப்புறம் நானே அவரை நல்லவரா நினைக்க ஆரம்பிச்சிட்டேனே, என் விசயத்தில அவர் எனக்கு உதவி செய்தாரு, அப்பாவை காப்பாத்தினாரு, தன்னை காதலிச்ச பெண்ணை விட்டுக்கொடுக்கற எண்ணம் எத்தனை பேருக்கு இருக்கு, அவர் ஒரு தாதாவா இருந்தாரு, அவரால எப்படி வேணும்னாலும் வாழ்ந்திருக்க முடியும் ஆனா, அவர் அப்படி செய்யலை, தன்னை காதலிச்ச பொண்ணையே கல்யாணம் செஞ்சிருக்கலாம் ஆனா, தன் உசுருக்கு உத்தரவாதம் இல்லை, தன்னை காதலிச்ச பொண்ணாவது சந்தோஷமா இருக்கட்டும்னு தனக்கு தெரிஞ்ச தன் நண்பனோட கல்யாணம் செஞ்சி வைச்சிருக்காரு, இதுல இருந்தே அவர் நல்ல மனசு தெரியுதே”

   

”ஏன் அவன் எந்த தப்பும் செஞ்சதில்லையா, அதை மறந்துட்டீங்களா பல பேரை கொன்னிருக்கான், கஞ்சா சப்ளை வேற இன்னும் என்னென்ன இருந்ததோ உங்களுக்கு தெரிஞ்சே இவ்ளோன்னா, தெரியாம அவன் செஞ்ச தப்புக்களை கணக்கெடுத்தா உங்களுக்கே தில்லையை பிடிக்காம போயிடும், தாலி கட்டிட்டான்ங்கறதுக்காக பண்பாடு அது இதுன்னு உங்க வாழ்க்கையை இழக்காதீங்க சம்யுக்தா, தில்லையை தூக்கிப் போடுங்க”

   

”இல்லை அது என்னால முடியாது, எனக்கு அவர்தான் வேணும்” என்றாள் உறுதியாக அவளின் 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.