”நான் சரியா விசாரிக்கலைன்னு நினைக்கிறேன், இன்னும் ஆழமா அவனைப்பத்தி விசாரிச்சா உண்மை தெரியும், அதுக்கு ஏற்பாடு செய்ங்க” என சொல்ல அந்த பொறுப்பை கைலாசம் ஏற்றுக் கொண்டார்
”விடுப்பா நான் பார்த்துக்கிறேன் என் தங்கச்சி பொண்ணு வாழ்க்கையை கெடுத்தவன் இளங்கோவனா தில்லையான்னு தெரியலை, அது எவன்னு தெரியட்டும் அன்னிக்கு இருக்கு அவனுக்கு, நான் போய் இளங்கோவனை பத்தி விசாரிக்கிறேன்“ என சொல்ல
இதில் சிவசங்கரனும் ஒரு முடிவுக்கு வந்தார்
”சம்யுக்தா தானாதான் தில்லையை தேடிப் போயிருக்கா, இப்ப நாம எதை செஞ்சாலும் அது அவள் உயிருக்கே ஆபத்தாயிடும், நாம அமைதியா இருக்கலாம்” என அவர் சொல்ல அதற்கு அனைவரும் சரியென்றார்கள்.
இதில் கைலாசமும் வெளியே செல்ல கிளம்பியவரை தில்லையின் அடியாட்கள் தடுத்தனர் ஆனால் அவரோ
”நான் இளங்கோவனை பத்தி விசாரிக்கத்தான் போறேன், எதனால தில்லை இந்த கல்யாணத்தை நிறுத்தினான்னு நான் தெரிஞ்சிக்கனும், போலீஸ்கிட்ட நான் போகலை, அப்படி போனா என் தங்கச்சி புருஷனை நீங்க என்ன வேணும்னாலும் செய்வீங்கன்னு எனக்குத் தெரியும், என்னை நம்புங்க நான் போலீஸ்கிட்டயும் போகலை, தில்லை கிட்டயும் போகலை இளங்கோவை பத்தி விசாரிக்கதான் போறேன் வழிவிடுங்க” என சொல்ல அவர்களும் வழிவிட்டார்கள்.
அதில் கைலாசமும் இளங்கோவனை பற்றி விசாரிக்கச் சென்றார்.
இங்கோ முழுதாக 3 மணி நேரம் கழித்து கண்கள் திறந்தான் தில்லை. அவனின் அசைவைக் கண்ட சம்யுக்தாவோ
”இப்ப உங்களுக்கு எப்படியிருக்கு” என அக்கறையாக கேட்க அவனோ