தொடர்கதை - ரோஜா மலரே ராஜக்குமாரி...! - 08 - பிந்து வினோத்
This is a Chillzee Originals - Princess Novel episode.
- Visit Chillzee Originals Novels page for other current Chillzee Original stories.
- Visit Chillzee Princess Novels page for other current Chillzee Princess stories.
சாரதா பொதுவாக ரொம்பவும் கூர்மையான பெண்மணி!
ஷெர்லக் ஹோம்ஸ் போல ஒரே பார்வையிலேயே ஒருவரின் ஹிஸ்டரி, ஜியாக்ரஃபி எல்லாம் சொல்லும் அளவிற்கு ஆளை அளவிடும் திறமை வாய்ந்தவள்.
ஆனால் ரோஹினியை அலங்கரித்து, காலம் காலமாய் அவள் மனதில் பூட்டி வைத்திருந்த பெண் குழந்தை ஆசையை பகுதியாக ரசித்து அனுபவித்துக் கொண்டிருந்தவள், நிரஞ்சனா கண்களில் வந்த அந்த பொறாமை சாயலை கண்டுக் கொள்ளத் தவறினாள்!
அதற்கு பதிலாக, நிரஞ்சனாவின் பொறாமையை இன்னும் அதிகரிப்பவளைப் போல,
“இந்த ஹேர் ஸ்டைல் அழகா இருக்குள்ள நிரு? ரோஹினிம்மா ரொம்ப அழகா இருக்குடா,” என ரோஹினியை மீண்டும் செல்லம் கொஞ்சினாள்.
நிரஞ்சனா காதில் புகை வரத் தொடங்க, அதை அறியாத ரோஹினியோ, மனதுக்குள் எடுத்திருந்த முடிவின் காரணமாக, “நீங்க அன்பா தலை வாரி விட்டதாலேயா இருக்கும்,” என அடக்கமும், வெட்கமும் கலக்க சொன்னாள்!
முதல் முறையாக கேட்ட ரோஹினியின் இனிய குரலைக் கேட்டு நிரஞ்சனா முகத்தை சுளிக்க, சாரதாவிற்கோ ரோஹினி சொன்னதைக் கேட்டு உச்சி குளிர்ந்துப் போனது!
“நீ இங்கே இருக்கும் போது, தினம், தினம் உனக்கு நான் தான் தலை வாரி விடுவேன் ரோஹினிம்மா,” என்றாள் சாரதா!
“நீங்க இப்படி ரோஹினிம்மான்னு கூப்பிட்டு வாரி விட்டா, நான் தடுக்கவே மாட்டேன்!”
சாரதாவும், ரோஹினியும் தங்களின் செல்லம் கொஞ்சல்ஸை நிறுத்தாமல் தொடர, நிரஞ்சனாவின் காதில் இருந்து இப்போது டன் டன்னாக புகை வந்தது!!!!
இந்த ‘ஓவர்’ பாச பிணைப்பையும், செல்லம் கொஞ்சலையும் அவளால் சகித்துக் கொள்ள