“எதுக்கு சாரி எல்லாம் சொல்ற? சரியா தான் சொன்ன! என் அண்ணாக்கு பிடிச்ச மாதிரி ஒரு பொண்ணு பிறந்திருக்குறது ரொம்ப கஷ்டம்! வேணும்னா கஸ்டம் (custom) ஆர்டர் கொடுத்து ரோபோ (robot) செய்ய சொல்லலாம்! மத்தபடி ஹுஹும்... ரொம்ப கஷ்டம்,” என்றான் விஜய் சிரிப்புடன்.
“டேய், சும்மா அஜயை ஏதாவது சொல்லிட்டு இருக்காதே,” என இளைய மகனை கண்டித்த சாரதா, ரோஹினியிடம், “பெரியவன் ஈசியா முடிவெடுக்குறவன் இல்லை ரோஹினிம்மா! அம்மாக்கு, தம்பிக்குன்னு நிறைய யோசிப்பான்,” என்றாள்.
ரோஹினி அதற்கு பதில் சொல்ல வாய்ப்பு கொடுக்காமல், “க்கும்!!! போதும் போதும் அண்ணன் புராணம்! ரஞ்சு டார்லிங், உன் ஃப்ரென்ட் ஷோ ரிபீட் இப்போ வருமே பார்க்கலையா,” என பேச்சை மாற்றினான் விஜய்!
பொறாமையில் ஆழ்ந்துப் போயிருந்த நிரஞ்சனா, விழித்துக் கொண்டு, “ஆமா, மறந்தே போயிட்டேன்... அத்தை, டிவில லோகல் கேபிள் சானல் போடுங்களேன். அனுவோட காமெடி டைம் இப்போ வரும்,” என்றாள் உற்சாகத்துடன்!
நிரஞ்சனா கேட்ட சேனலை உடனே போட்டுக் கொடுத்தாள் சாரதா.
டிவியில் நிரஞ்சனாவின் வயதை ஒத்த பெண், வாயெல்லாம் பல்லாக பேசிக் கொண்டிருந்தாள்!
“... தேங்க்ஸ் ஃபார் காலிங்! உங்களுக்கான கடி ஜோக் கேள்வி! ஈயெல்லாம் எப்படி ஒன்னோட ஒன்னு பேசிக்கும்???”
“ம்ம்ம்ம்ம்ம்.... தெரியலையே மேடம்! நீங்களே சொல்லிடுங்க...”
“வேறெப்படி “ஈ”மெயில் வழியா தான்... ஹா ஹா ஹா!!!!”
“மேடம் நீங்க தான் கடி ஜோக் ராணி! அதுல சந்தேகமே இல்லை!”