”நீயா எப்ப பாரு கண்முன்னாடியே இரு, உன்னைப் பார்த்துதான் கண் விழிக்கனுமா நானு” என அலுத்துக் கொள்ள அவளோ
”ரொம்ப அலுத்துக்காதீங்க விசயத்துக்கு வாங்க, எப்ப எனக்கு நியாயம் கொடுப்பீங்க”
என கேட்க அவனோ அலுப்பாக எழுந்து அமர்ந்தான், கடிகாரத்தில் மணியைப் பார்த்து வியந்தான்
“ஜனனி ஜனனி” என அழைக்க சம்யுக்தா கடுப்பானாள்
”போதும் அவங்க வீட்ல இல்லை ஆஸ்பிட்டல் போயிருக்காங்க”
”அப்படியா சரி வா கிளம்பலாம், இனி இங்க இருக்கறது நல்லதில்லை, வெளிய நம்ம வண்டியை பார்த்து எவனாவது வீட்டுக்குள்ள வந்துடப் போறான் வா வா” என அழைக்க அவளும் அமைதியாக அவனுடன் சென்றாள்.
அதற்குள் போலீஸ் ஸ்டேஷனில் இருந்த சிதம்பரமோ வலுவான ஆதாரம் கிடைத்துவிட்டதாக எண்ணி கதையை பாதியில் நிறுத்தியவன்
“200 கிலோ கஞ்சா அதுவும் கஸ்டம்ஸ்ல இருந்து வந்திருக்கு, இதைப்பத்தின தகவல் வந்திருக்குமே அதாவது இருக்குமா” என சிதம்பரம் கேட்க அதற்கு கான்ஸ்டபிளோ
”சார் அப்படியே வந்தாலும் நம்ம ஸ்டேஷனுக்கு வராது, கடலூர்லதான் கேட்கனும்”
”ப்ச் என்னய்யா நீ எதை கேட்டாலும் இப்படியே சொல்ற”
”சார் தில்லையை பத்தி ஒரு ஆதாரமும் இங்க இல்லை, அப்படியே இருந்தாலும் அவனே அதை அழிச்சிடுவான் சார்”
”ஏதாவது ஒரு ஆதாரம் இருக்கும், அதை வைச்சி அவனை நான் பிடிக்கறேன்”