(Reading time: 11 - 22 minutes)
En mel undranukkethanai anbadi
En mel undranukkethanai anbadi

”செத்தவனை எப்படி சார் பிடிப்பீங்க“

   

”இல்லை அவன் சாகலை, எங்கயோ இருக்கான் அவனை பிடிச்சா உண்மை தெரிய வரும்” என சிதம்பரம் சொல்ல அதற்கு சம்யுக்தாவோ

   

”அப்ப சீக்கிரமா அவரை கண்டுபிடிச்சி என்கிட்ட சேர்த்துடுங்க ஆபிசர்”

   

”கண்டிப்பா சேர்க்கறேன், டாக்டர் ஜனனி இந்த ஊர் ஆஸ்பிட்டல்ல வேலை செய்திருக்காங்க, அவங்களை பிடிச்சா அவங்க கணவர் சிவா அப்புறம் தில்லையை பற்றின ஏதாவது தகவல் கிடைக்க வாய்ப்பிருக்கு”

   

”நான் ஜனனியை பத்தி இங்க இருக்கற எல்லா ஆஸ்பிட்டல்லயும் விசாரிச்சேன் ஆனா, அப்படி யாரும் வேலை செய்யலைன்னு சொல்லிட்டாங்க”

   

”அப்படின்னு சொல்ல வைச்சிருக்கலாமே”

   

“யார் அப்படி செய்யனும்”

   

”தில்லையா கூட இருக்கலாம், தன்னைப் பத்தின தகவல்கள் யாருக்கும் தெரியக் கூடாதுன்னு தனக்கு தெரிஞ்சவங்களை எல்லாம் அவன் இடமாற்றம் செய்திருக்கலாம், ஒரு போலீஸ் அதிகாரி சிவா, அவர் யார்ன்னே தெரியலை, அவரோட மனைவி ஜனனி ஒரு டாக்டர், இவங்க ரெண்டு பேருமே தில்லையோட நண்பர்கள், அப்ப கண்டிப்பா தில்லையை பத்தின தகவல்கள் இவங்ககிட்ட இருக்கலாம் இல்லை இவங்க இருக்கற இடத்தில தில்லை இருக்கலாம் இல்லைன்னா தன்னோட இடத்தில சிவாவையும் ஜனனியையும் வைச்சிருக்கலாம் இந்த 3 பேர்ல ஒருத்தர் கிடைச்சா கூட போதும் இந்த கேஸ் முடிவுக்கு வரும்”

   

”கேஸ் அப்புறம் எனக்கு என் புருஷன் வேணும்”

   

”சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க, தில்லை ஒரு கிரிமினல் அவனை நான் கண்டுபிடிச்சாலும் ஜெயில்லதான் தள்ளுவேன், நீங்க அவரை உங்க புருஷன்னு நினைக்காம இருக்கறது நல்லது, 

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.