“என்னைக்கு சொன்னேன்?” என புரியாமல் கேட்டாள் மைத்ரேயி.
நளினியின் பார்வை மித்ரன் பக்கமாக செல்லவும், மைத்ரேயிக்கு தானாக விஷயம் புரிந்தது.
“ஆமாம்ம்மா... அதே சரண்யா தான்...” என்றாள்.
நளினி தனக்குள்ளே யோசனையில் ஆழ்ந்தாள்! மித்ரன் குடித்து விட்டு நிதானம் இல்லாமல் வீடு வந்த அன்று வழியில் நடந்ததை ட்ரைவர் அவளிடமும் சொல்லி இருந்தான்! மைத்ரேயி வழியாக ஏற்கனவே சரண்யாவை பற்றி தெரிந்திருந்ததால் நளினிக்கும் கூட சரண்யாவின் உதவி ஆச்சர்யமாக தான் இருந்தது! மைத்ரேயிக்காக சரண்யா செய்தாள் என்று டிரைவர் சொன்னாலும் கூட சரண்யாவின் நல்ல மனம் நளினியை நெகிழ வைத்திருந்தது!
இப்போது சரண்யாவிற்கு ஒரு பிரச்சனை என்று தெரிந்த பிறகும் அமைதியாக இருக்க மனம் வராமல்,
“மைத்தி, இங்கே நம்ம வீட்டுல இருந்து உன் கம்பெனி போக அஞ்சு பத்து நிமிஷம் தானே ஆகும்? பேசாம அந்த சரண்யாவை இங்கே நம்ம கெஸ்ட் ஹவுஸ்ல தங்கிக்க சொல்லு... நம்ம வீட்டுக்கு கெஸ்ட் வந்தா தங்க வைக்க ரூமுக்கா பஞ்சம்?” என்றாள்.
நளினியின் ஐடியாவை கேட்டு ஆச்சர்யப்பட்டாலும், பதில் ஒன்றும் சொல்லாமல், மீண்டும் அண்ணனின் பக்கம் பார்த்தாள் மைத்ரேயி...
மித்ரனும் அப்போது யோசித்துக் கொண்டு தான் இருந்தான்...
அம்மாவிடம் இருந்து அவனும் அப்படி ஒரு ஐடியாவை எதிர்பார்த்திருக்கவில்லை... ஆனால் அது அவனுக்கு பிடித்திருந்தது...
மைத்ரேயி என்ன பதில் சொல்ல போகிறாள் என்ற கேள்வியுடன் அவன் தங்கையை பார்த்தால், அவள் அவனை தான் எடைப் போடுவது போல நோட்டம் விட்டுக்