“இவனும் இவன் வேல்யூவும்... சரியான லூசு,” என்று மெல்லிய குரலில் முணுமுணுத்தாள் மைத்ரேயி...
அவள் சொன்னதில் லூசு மட்டும் காதில் விழ, அவளை கண்களில் சிரிப்புடன் பார்த்தான் ஜெயந்த்... அவனின் பார்வை கண்ணில் படவும், மைத்ரேயியின் முகத்திலும் தானாக புன்னகை தோன்றியது...
“அப்போ நீ என்ன சொல்ற மைத்தி?” என நளினி மீண்டும் மைத்ரேயிடம் கேட்கவும்,
“சரண்யா கிட்ட பேசி பார்க்கிறேன்ம்மா... அவ ஒத்துக்குவாளான்னு தெரியலை... அதும், நாம ஹெல்ப் செய்ய ட்ரை செய்றோம்னு தெரிஞ்சா என்ன சொல்வான்னு தெரியலை... நான், பேசி பார்க்கிறேன்,” என்றாள் மைத்ரேயி.
“இல்லை... மைத்தி... எப்படியாவது சரண்யா கிட்ட பேசி இங்கே வர சொல்லு... இது நாம அவளுக்கு செய்ய வேண்டிய ஒன்னு...”
மைத்ரேயியிடம் பேசினாலும் நளினி மித்ரனை பார்த்தப்படி சொன்னதில் இருந்தே, மித்ரனின் நடவடிக்கைகளுக்கு பிராயச்சித்தமாக அம்மா இதை செய்ய சொல்வது மைத்ரேயிக்கு புரிந்தது...!
அவளுக்கும் கூட மித்ரன் முன்பு சரண்யாவை நடத்திய விதம் இப்போதும் மனதில் உறுத்திக் கொண்டு தான் இருந்தது... அன்று அவளின் ஆஃபீஸ் ரூமிலேயே சரண்யாவிடம் என்ன பேச்சு பேசினான்...
அவன் சரண்யா மீது பரிதாபப் பட வேண்டுமென்று இல்லை, மரியாதையுடன் நடத்தி இருந்திருக்கலாம்...
மித்ரன் செய்தது போல, யாரிடமும் நடந்து அவளுக்கு பழக்கமில்லை... அப்படி அவளுடைய பெற்றோர் அவளையோ, மித்ரனையோ வளர்க்கவும் இல்லை...