(Reading time: 8 - 15 minutes)
Malaiyil yaaro manathodu pesa...
Malaiyil yaaro manathodu pesa...

“ம்ம்ம்...”

   

“எங்க ஏரியா நல்ல ஏரியா தான்... ஆனால் இப்போ எல்லாம் பக்கத்துல புது வீடு, அபார்ட்மென்ட் அது இதுன்னு கட்டுறாங்க... அதை தவிர கவர்ன்மென்ட் வேலை வேற ஏதேதோ நடக்குது... அதனால அந்த வேலை, இந்த வேலைன்னு சொல்லிட்டு புதுசா நிறைய பேர் இருக்காங்களா... இப்போ எல்லாம் இந்த இடம் முன்னாடி போல இல்லை... கொஞ்சம் இருட்டுனா கூட ஃப்ரீயா வெளியே நடக்க முடியலை...”

   

மைத்ரேயிக்கு சுலோச்சனா என்ன சொல்ல வருகிறாள் என்று புரியவில்லை...

   

“சரண்யாவுக்கு ஏதாவது ப்ராப்ளமா??”

   

“தினம் தினம் ஆஃபிஸ்ல இருந்து வரும் போது எவனுங்களோ அசிங்கமா பேசுறாங்கன்னு சொல்லிட்டே இருக்கா... பாவம் பயந்த சுபாவம் உள்ள பொண்ணு... ஆஃபிஸ் பக்கத்துல வீடு பார்த்துட்டு போறதுக்கும், தனியா இருக்கவும் பயப்படுறா... என்ன செய்றது...”

   

“சரண்யா என் கிட்ட இதை பத்தி எதுவும் சொல்லவே இல்லையே... டூ வீலர் வாங்கலாமே... போயிட்டு வர ஈசியா இருக்குமே...”

   

“நீங்க வேற... நான் எவ்வளவோ சொல்லி பார்த்துட்டேன்... அதுக்கும் பயப்படுறா... நேத்தைக்கு நைட் வந்தப்போவே அவ முகம் சரியில்லை... இவ்வளவு நாளா தள்ளி நின்னு பேசிட்டு இருந்தவனுங்க, நேத்து மேல படுற மாதிரி வேணும்னே நடந்து போறாங்களாம்... தெரிஞ்ச போலீஸ்க்காரர் கிட்ட சொல்லி வச்சிருக்கேன்... அவரும் பேசி மிரட்டி வைக்குறேன்னு சொல்லி இருக்கார்...”

   

சுலோச்சனாவுடன் மேலும் சில நிமிடங்கள் பேசிவிட்டு ஃபோனை கட் செய்து வைத்த போது மைத்ரேயிக்கு சரண்யாவை நினைத்து கவலையாக தான் இருந்தது...

   

ஆனால் அவளால் செய்யக் கூடியது எதுவுமில்லையே...! சரண்யா ஜுரம் சரியாகி வந்த பிறகு அவளிடம் பேசி டூ வீலர் வாங்க சொல்ல வேண்டும் என்று மட்டும் நினைத்துக் கொண்டாள்.

No comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.