மற்றவர்கள் வீட்டை நோக்கி சென்றார்கள்.
✽✽✽
பூங்கோதை தான் சொன்னது சாதாரணம் என்று சொல்லும் அளவிற்கு வெகு தடபுடலாக உணவு தயாரித்திருந்தாள்....
நேரம் செல்வதே தெரியாமல் உணவின் சுவையில் தங்களை மறந்தவர்களாக அனைவருமே உணவை ஒரு பிடி பிடித்தார்கள்...
சாப்பிட்டு முடித்து பூங்கோதையும், விமலும் இளைப்பாற சென்று விட, மற்றவர்கள் உண்ட களைப்பு போக, அமர்ந்து பொதுவான விஷயங்களை பற்றி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்...
பேச்சின் நடுவே ரேஷ்மி அடுத்து என்ன செய்ய போகிறாள் என்ற கேள்வி வந்தது...
“இந்த காலத்துல எம்.பி.பி.எஸ் படிச்சு என்ன இருக்கு... கட்டாயம் எம்டி படிச்சே தான் ஆகனும்... ரேஷ்மி அப்பா கிட்டேயும் இதை பத்தி சொல்லிட்டேன்,” என்றாள் ரோஷனி.
எந்த அளவிற்கு ரேஷ்மிக்காக யோசித்திருக்கிறாள் என்று ஹேமா வியந்துக் கொண்டிருக்க, ரேஷ்மி அப்பா என்ற வார்த்தை காதில் விழுந்ததுமே மனம் கசந்தாள்...
படிக்க பணம் கொடுத்தால் போதுமா??? அது மட்டும் தானா ஒரு தந்தையின் கடமை...???
சித்திக்கு அவள் மேல் இருக்கும் அக்கறை, அன்பில் ஒரு சதவிகிதமாவது அவள் அப்பாவிற்கு இருக்காதா...!!!!
மகள் பதக்கம் வெல்வதை பார்த்து வாய் திறந்து ஒரு வாழ்த்து கூட சொல்லாமல்... ச்சே என்ன மாதிரியான மனிதர் இவர்...!!!
“என்ன ரேஷ்மி அமைதியா இருக்க??”